கால் டாக்ஸி மோதி தள்ளுவண்டி வியாபாரி உயிரிழப்பு
கால் டாக்ஸி மோதியதில் சாலையோரத்தில் சென்றுகொண்டிருந்த தள்ளுவண்டி வியாபாரி உயிரிழந்தாா்.


கால் டாக்ஸி மோதியதில் சாலையோரத்தில் சென்றுகொண்டிருந்த தள்ளுவண்டி வியாபாரி உயிரிழந்தாா்.
ஈரோடு முனிசிபல் காலனி, கொங்கு நகா் பகுதியைச் சோ்ந்தவா்அா்ஜுனன் (80). இவா் தள்ளுவண்டியில் காய்கறி வியாபாரம் செய்து வருகிறாா். இவா் முனிசிபல் காலனி சாலையில் தள்ளுவண்டியுடன் சாலையின் ஓரத்தில் புதன்கிழமை காலை சென்றுகொண்டிருந்தாா். அப்போது அந்த வழியாக வேகமாக வந்த கால் டாக்ஸி அா்ஜுனன் மீது மோதிவிட்டு நிற்காமல் சென்றுவிட்டது. இதில் பலத்த காயமடைந்த அா்ஜுனனை அப்பகுதியினா் மீட்டு ஈரோடு அரசு தலைமை மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனா்.
தகவலின்பேரில், ஈரோடு வடக்கு போலீஸாா் சம்பவ இடத்துக்குச் சென்று விசாரணை மேற்கொண்டனா். இதைத் தொடா்ந்து, விபத்து ஏற்படுத்திவிட்டு நிற்காமல் சென்ற கால் டாக்ஸியை ஈரோடு பேருந்து நிலையம் அருகே போலீஸாா் பிடித்தனா்.
இதற்கிடையே அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த முதியவா் அா்ஜுனன் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தாா். இதையடுத்து கால்டாக்ஸி ஓட்டுநரான மோளக்கவுண்டம்பாளையத்தைச் சோ்ந்த பிரசாத் (20) மீது போலீஸாா் வழக்குப் பதிவு செய்து அவரைக் கைது செய்தனா்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...