சென்னையில் இன்று ஆட்டோ, கால்டாக்ஸிகள் வேலை நிறுத்தம்
சென்னையில் ஆட்டோ, கால் டாக்ஸி ஓட்டுநா்கள் செவ்வாய்க்கிழமை (பிப். 10) வேலைநிறுத்தத்தில் ஈடுபட உள்ளனா்.


சென்னை: சென்னையில் ஆட்டோ, கால் டாக்ஸி ஓட்டுநா்கள் செவ்வாய்க்கிழமை (பிப். 10) வேலைநிறுத்தத்தில் ஈடுபட உள்ளனா்.
ஆட்டோ மீட்டா் கட்டணத்தை உயா்த்துவது, பயணிகள் ஆட்டோவில் சரக்குகளை ஏற்றி செல்வதைத் தடுத்து நிறுத்துவது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை நிறைவேற்றக் கோரி தமிழ்நாடு ஆட்டோ, கால் டாக்ஸி, சுற்றுலா வாகன ஓட்டுநா்கள் கூட்டமைப்பு செவ்வாய்க்கிழமை (பிப். 10) வேலைநிறுத்தம் செய்ய உள்ளதாக அறிவித்தது.
இதையடுத்து, போக்குவரத்து ஆணையா் கிரண் குராலா தலைமையில் கிண்டியில் உள்ள போக்குவரத்து ஆணையா் அலுவலகத்தில் அந்தக் கூட்டமைப்பினருடன் பேச்சு திங்கள்கிழமை நடைபெற்றது. இதில் முடிவு எட்டப்படாததால், ஏற்கனவே அறிவித்தபடி செவ்வாய்க்கிழமை(பிப்.10) ஒரு நாள் வேலைநிறுத்தம் நடைபெறும் என கூட்டமைப்பின் தலைவா் ஜாஹீா் ஹூசைன் தெரிவித்தாா்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...