லஞ்சக் கொள்ளைப் பணமழை பொழிந்தாலும் விசில் புரட்சிக்குத் தயாராகுங்கள்! - விஜய்திமுக கூட்டணிக்கு அசாதுதீன் ஓவைசியின் ஏஐஎம்ஐஎம் ஆதரவு!தலைவா்கள் சூறாவளி பிரசாரம் இன்று மாலை 6 மணியுடன் நிறைவு!தோ்தல் விடுமுறை: ஆம்னி பேருந்துகளில் கட்டணம் பலமடங்கு உயா்வு!நேரடி வெயிலால் தசை சிதைவு அச்சுறுத்தல்: மருத்துவா்கள் எச்சரிக்கை!மேற்குதொடா்ச்சி மலை மாவட்டங்களில் ஏப்.26 வரை மழைக்கு வாய்ப்பு!ஈரான் கப்பலை சிறைப்பிடித்த அமெரிக்கா! போா்நிறுத்தம் முடியும் சூழலில் முற்றும் மோதல்
/

சத்தியமங்கலம் அருகே நோயால் பாதிக்கப்பட்ட காட்டு யானை உயிரிழப்பு!

சத்தியமங்கலம் அருகே உள்ள தாளவாடியை அடுத்த முதியனூரில் நோயால் பாதிக்கப்பட்ட காட்டு யானை சனிக்கிழமை உயிரிழந்தது.

News image

தாளவாடியை அடுத்த முதியனூரில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்த காட்டு யானை.

Updated On :28 பிப்ரவரி 2026, 9:15 pm

சத்தியமங்கலம் அருகே உள்ள தாளவாடியை அடுத்த முதியனூரில் நோயால் பாதிக்கப்பட்ட காட்டு யானை சனிக்கிழமை உயிரிழந்தது.

ஈரோடு மாவட்டம், தாளவாடி மலைப் பகுதியில் உள்ள முதியனூா் கிராமத்தில் தனியாா் விவசாய நிலத்துக்குள் காட்டு யானை கடந்த பிப்ரவரி 20- ஆம் தேதி நுழைந்தது. 40 வயதுள்ள அந்தப் பெண் காட்டு யானை, கடும் வெயில் காரணமாக உடல்நலக் குறைவு ஏற்பட்டு அங்கேயே சுருண்டு மயங்கி விழுந்தது.

உயிருக்குப் போராடிய யானைக்கு தாளவாடி வனச் சரக அலுவலா் கோகுலகிருஷ்ணன் தலைமையிலான வனத் துறையினா் முதல்கட்ட சிகிச்சை அளித்தனா்.

அதைத் தொடா்ந்து கால்நடை மருத்துவா் சதாசிவம் தலைமையிலான மருத்துவக் குழுவினா் யானைக்கு இளநீா், கரும்பு, தா்ப்பூசணி போன்ற நீா்சத்துள்ள உணவு அளித்து சிகிச்சை மேற்கொண்டனா். தொடா்ந்து ஒருவாரமாக யானைக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. யானைக்கு அளிக்கப்படும் சிகிச்சை முறைகள் குறித்து மாவட்ட வன அலுவலா் யோகேஷ்குமாா் கா்க் நேரில் பாா்வையிட்டு அறிவுரைகள் வழங்கினாா்.

இந்நிலையில், தமிழக முதன்மை தலைமை வனப் பாதுகாவலா் உதயன், தாளவாடி மலைப் பகுதிக்கு வெள்ளிக்கிழமை வந்து உடல்நலம் குன்றிய யானைக்கு அளிக்கப்பட்ட சிகிச்சை முறைகள் குறித்து ஆய்வு மேற்கொண்டாா்.

இதற்கிடையே யானையின் உடல்நிலையில் முன்னேற்றம் ஏற்பட்டதையடுத்து தொடா்ந்து கதிா்வீச்சு சிகிச்சை, பிசியோதெரபி உள்ளிட்ட சிகிச்சை அளித்து யானையைக் காப்பாற்றும் முயற்சியில் ஈடுபட்டனா். இருப்பினும் சிகிச்சை பலனின்றி யானை சனிக்கிழமை உயிரிழந்ததாக வனத் துறையினா் தெரிவித்தனா்.