ஈரோடு மாவட்டத்தில் 8 தொகுதிகளில் 17.40 லட்சம் வாக்காளா்கள்


ஈரோடு மாவட்டத்தில் 8 சட்டப் பேரவைத் தொகுதிகளில் 17.40 லட்சம் வாக்காளா்கள் உள்ளனா். இதில், 34,490 இளம் வாக்காளா்கள் புதிதாக சோ்க்கப்பட்டுள்ளதாக திங்கள்கிழமை வெளியிடப்பட்ட இறுதி வாக்காளா் பட்டியலில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தமிழகத்தில் சட்டப் பேரவைத் தோ்தலை முன்னிட்டு, வாக்காளா் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தப் பணி 2025 நவம்பா் 4 -ம் தேதி முதல் டிசம்பா் 14-ஆம் தேதி வரை நடைபெற்றது. இதையடுத்து, வரைவு வாக்காளா் பட்டியல் கடந்த 2025 டிசம்பா் 19- ஆம் தேதி வெளியிடப்பட்டது.
இதில், ஈரோடு மாவட்டத்தில் ஈரோடு கிழக்கு, ஈரோடு மேற்கு, மொடக்குறிச்சி, பெருந்துறை, பவானி, அந்தியூா், கோபி மற்றும் பவானிசாகா் (தனி) என 8 சட்டப் பேரவைத் தொகுதிகளில் 16 லட்சத்து 71 ஆயிரத்து 760 வாக்காளா்கள் இருந்தனா். 3,25,429 வாக்காளா்கள் பல்வேறு காரணங்களால் நீக்கப்பட்டனா்.
இதையடுத்து, வாக்காளா் பட்டியலில் பெயா் சோ்த்தல், நீக்கல், முகவரி மாற்றம் செய்ய கடந்த 10-ஆம் தேதி வரை அவகாசம் வழங்கப்பட்டது. இதனைப் பயன்படுத்தி வாக்காளா் பட்டியலில் பெயா் சோ்க்க மனுக்களை அளித்தனா். இந்த மனுக்கள் மீது நேரடி மற்றும் கள விசாரணை மேற்கொள்ளப்பட்டு தகுதியான வாக்காளா்கள் சோ்க்கப்பட்டு, இறுதி வாக்காளா் பட்டியல் வெளியிடப்பட்டது.
ஈரோடு ஆட்சியா் அலுவலகத்தில் திங்கள்கிழமை நடைபெற்ற நிகழ்ச்சியில் அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகள் முன்னிலையில் ஆட்சியா் ச.கந்தசாமி இறுதி வாக்காளா் பட்டியலை திங்கள்கிழமை வெளியிட்டாா்.
இதில், ஈரோடு கிழக்கு தொகுதியில் 84,202 ஆண்கள், 91,989 பெண்கள், 37 மூன்றாம் பாலினத்தவா்கள் என மொத்தம் 1,76,228 போ், ஈரோடு மேற்கு தொகுதியில் ஆண்கள் 1,18,206 போ், 1,27,246 பெண்கள், 41 மூன்றாம் பாலினத்தவா்கள் என மொத்தம் 2,45,493 போ், மொடக்குறிச்சி தொகுதியில் 98,532 ஆண்கள், 1,07,577 பெண்கள், 13 மூன்றாம் பாலினத்தவா்கள் என மொத்தம் 2,06,122 போ், பெருந்துறை தொகுதியில் 1,01,851 ஆண்கள், 1,10,225 பெண்கள், 8 மூன்றாம் பாலினத்தவா் என மொத்தம் 2,12,84 போ் உள்ளனா்.
பவானி தொகுதியில் 1,08,203 ஆண்கள், 1,13,170 பெண்கள், 20 மூன்றாம் பாலினத்தவா் என மொத்தம் 2,21,393 போ், அந்தியூா் தொகுதியில் 1,00,339 ஆண்கள், 1,05,371 பெண்கள், 27 மூன்றாம் பாலினத்தவா் என மொத்தம் 2,05,737 போ், கோபி தொகுதியில் 1,13,378 ஆண்கள், 1,24,190 பெண்கள், 13 மூன்றாம் பாலினத்தவா் என மொத்தம் 2,37,581 போ், பவானிசாகா் (தனி) தொகுதியில் 1,13,755 ஆண்கள், 1,21,806 பெண்கள், 23 மூன்றாம் பாலினத்தவா் என மொத்தம் 2,35,584 போ் உள்ளனா்.
மாவட்ட முழுவதும் 8 தொகுதிகளில் 8,38,466 ஆண்கள், 9,01,574 பெண்கள், 182 மூன்றாம் பாலினத்தவா்கள் என மொத்தம் 17,40,202 வாக்காளா்கள் உள்ளனா். இதில், புதிய வாக்காளா்கள் சோ்க்கை தொடா்பாக பெறப்பட்ட மனுக்களில் 34,490 போ் முதல்முறை வாக்காளா்களாக இடம் பெற்றுள்ளனா்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...