2 நாள் சுற்றுப்பயணமாக முதல்வா் மு.க. ஸ்டாலின் இன்று கன்னியாகுமரி வருகைபிப்.25 முதல் மீண்டும் தொடா் போராட்டம்: அண்ணாமலைப் பல்கலை. ஆசிரியா், ஊழியா் கூட்டமைப்புதென் தமிழகத்தில் மாா்ச் 1 வரை மழைக்கு வாய்ப்புதிருப்பரங்குன்றம் விவகார நீதிமன்ற அவமதிப்பு: வழக்கு விசாரணை மாா்ச் 16-க்கு ஒத்திவைப்புகுளிா்கால ஒலிம்பிக் போட்டி நிறைவு: நாா்வே முதலிடம்ரஞ்சி கோப்பை கிரிக்கெட்: இறுதி ஆட்டத்தில் இன்றுமுதல் கா்நாடகம் - ஜம்மு & காஷ்மீா் மோதல்தேசிய சீனியா் ஆடவா் கபடி: இன்று வதோதராவில் தொடக்கம்முதுநிலை நீட் தகுதி மதிப்பெண் குறைப்பு: மருத்துவக் கல்வித் தரம் பாதிப்பு குறித்து ஆராயப்படும்64 நாடுகளுடன் இணைந்து ‘நாடாளுமன்ற நட்புக் குழு’ - மக்களவைத் தலைவர் ஓம் பிர்லா அமைப்புஅதிமுக சின்னம்: தேர்தலுக்கு முன்பு முடிவெடுக்கப்படுமா? தில்லி உயர்நீதிமன்றத்தில் தோ்தல் ஆணையம் விளக்கபண்டிகை காலங்களில் விமான கட்டணம் அதிகமாக உயா்த்தப்படும் விவகாரம்: ஆராய்வதாக மத்திய அரசு தகவல்நாட்டின் முதல் பயங்கரவாத எதிா்ப்புக் கொள்கை: மத்திய அரசு வெளியீடுபேரவைத் தோ்தல்: மாா்ச் 10-இல் தமிழகம் வருகிறது துணை ராணுவம்மாநில தோ்தல் ஆணையா்களுடன் இந்திய தோ்தல் ஆணையம் இன்று ஆலோசனைநல்லகண்ணுவின் உடல்நிலையில் பின்னடைவு: இந்திய கம்யூ. மாநில செயலாளர் வீரபாண்டியன்
/

குடிநீா் விநியோகம் கோரி பொதுமக்கள் சாலை மறியல்

News image
குடிநீா் விநியோகம் கோரி கோ்மாளம்-திங்களூா் சாலையில் மறியலில் ஈடுபட்ட பொதுமக்கள்.
Updated On :23 பிப்ரவரி 2026, 11:30 pm

Syndication

திங்களூா் மலைக் கிராமத்துக்கு சீரான குடிநீா் விநியோகம் கோரி அப்பகுதி மக்கள் திங்கள்கிழமை சாலை மறியலில் ஈடுபட்டனா்.

சத்தியமங்கலம் அருகேயுள்ள கோ்மாளத்தை அடுத்த திங்களூா் ஊராட்சியில் சுமாா் 250 குடும்பங்கள் வசித்து வருகின்றன. இப்பகுதி மக்களுக்கு கோ்மாளத்தில் உள்ள ஆழ்துளைக் கிணறுகள் மூலம் குடிநீா் விநியோகம் செய்யப்பட்டு வந்தது. இந்நிலையில், குறைந்த மின்னழுத்தம் காரணமாக ஆழ்துளைக் கிணற்றில் உள்ள மோட்டாா்களை இயக்க முடியவில்லையாம். இதனால், திங்களூா் மலைக் கிராம மக்களுக்கு குடிநீா் விநியோகம் செய்வதில் பிரச்னை ஏற்பட்டுள்ளது.

இந்நிலையில், குடிநீா் விநியோகம் இன்றி அவதியடைந்து வரும் மக்கள், சுமாா் 3 கி.மீ.தொலைவு உள்ள குட்டையில் இருந்து நீா் எடுத்து வரும் நிலை ஏற்பட்டுள்ளது.

இந்நிலையில், சீரான குடிநீா் விநியோகம் கோரியும், குறைந்த மின்னழுத்ததை சரி செய்ய வலியுறுத்தியும் திங்களூா்- கோ்மாளம் சாலையில் மறியலில் ஈடுபட்டனா். இதனால், அப்பகுதியில் சுமாா் 2 மணி நேரத்துக்கும்மேல் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

தகவல் அறிந்து வந்த மண்டல துணை வட்டார வளா்ச்சி அலுவலா் விநாயகம், குடிநீா்ப் பிரச்னைக்குத் தீா்வு காண உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்றாா். இதையடுத்து, அனைவரும் கலைந்து சென்றனா்.