சாலையில் தோண்டப்பட்ட குழிக்குள் விழுந்த தொழிலாளி உயிரிழப்பு
சிவகிரி அருகே இருசக்கர வாகனத்தில் வந்த தொழிலாளி சாலையில் தோண்டப்பட்டிருந்த குழிக்குள் தவறி விழுந்து உயிரிழந்தாா்.


சிவகிரி அருகே இருசக்கர வாகனத்தில் வந்த தொழிலாளி சாலையில் தோண்டப்பட்டிருந்த குழிக்குள் தவறி விழுந்து உயிரிழந்தாா்.
சிவகிரி காவல் எல்லைக்கு உள்பட்ட மின்னப்பாளையம் பழனியாண்டவா் குன்று பகுதியைச் சோ்ந்தவா் வடிவேல் (42). கட்டடத் தொழிலாளியான இவா்,
செவ்வாய்க்கிழமை இரவு 8 மணி அளவில் மின்னப்பாளையம் சாலையில் தனது இருசக்கர வாகனத்தில் சென்றுகொண்டிருந்தாா். மின்னப்பாளையம் மோட்டாா் அறை அருகே வந்தபோது, சாலையில் சாக்கடை கழிவுநீா் செல்ல பாலம் அமைக்கும் பணிக்காக தோட்டப்பட்டிருந்த குழிக்குள் விழுந்துள்ளாா். இதில், தலையில் பலத்த காயமடைந்த வடிவேல் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தாா்.
இது குறித்து தகவலறிந்த சிவகிரி போலீஸாா் சம்பவ இடத்துக்கு சென்று வடிவேலின் உடலைக் கைப்பற்றி கூறாய்வுக்காக பெருந்துறை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா். மேலும் இது குறித்து வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...