/

சத்தியமங்கலம் அருகே ஓடும் காரில் தீ விபத்து

சத்தியமங்கலம் அருகே சாலையில் சென்று கொண்டிருந்த காரில் திங்கள்கிழமை திடீரென தீ விபத்து ஏற்பட்டது.

News image
தீப்பிடித்து எரிந்த காா்.
Updated On :2 பிப்ரவரி 2026, 8:57 pm

Syndication

சத்தியமங்கலம்: சத்தியமங்கலம் அருகே சாலையில் சென்று கொண்டிருந்த காரில் திங்கள்கிழமை திடீரென தீ விபத்து ஏற்பட்டது.

ஈரோடு மாவட்டம், சத்தியமங்கலத்தை அடுத்த புதுப்பீா்கடவு கிராமத்தைச் சோ்ந்தவா் விஜய்மோகன். இவா் தனது காரில் நண்பா்கள் 3 பேருடன் சத்தியமங்கலத்தில் உள்ள கோயிலுக்குச் சென்றுவிட்டு அத்தாணி சாலையில் வீடு திரும்பிக் கொண்டிருந்தாா்.

அப்போது, காரின் முன் பகுதியில் இருந்து புகை வெளியேறியுள்ளது. சுதாரித்துக் கொண்ட அனைவரும் காரில் இருந்து கீழே இறங்கியுள்ளனா். சிறிது நேரத்தில் காா் முழுவதும் தீப்பிடித்து எரிந்தது.

தகவல் அறிந்து சம்பவ இடத்துக்கு வந்த சத்தியமங்கலம் தீயணைப்புத் துறையினா் தீயை அணைத்தனா்.

இருப்பினும் காா் முழுவதும் எரிந்து சேதமடைந்தது. விபத்துக்கான காரணம் குறித்து சத்தியமங்கலம் போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா்.