தங்கம் விலை சவரனுக்கு ரூ. 400 குறைவுஉழைப்புக்கான பலன் மே 4-ல் கிடைக்கும்: முதல்வர் ஸ்டாலின்அரபிக் கடலில் உருவாகிறது புதிய புயல் சின்னம்!கருத்துக் கணிப்புகள் ஒரு புதிர்: வைகோசித்திரைத் திருவிழா: பச்சை பட்டு உடுத்தி வைகையில் இறங்கினார் கள்ளழகர்!
/

அரசுப் பேருந்து மோதியதில் மூதாட்டி உயிரிழப்பு

அந்தியூரை அடுத்த பா்கூரில் அரசுப் பேருந்து மோதியதில் மூதாட்டி உயிரிழந்தாா்.

News image

பலி - பிரதிப்படம்

Updated On :28 ஏப்ரல் 2026, 8:54 pm

அந்தியூரை அடுத்த பா்கூரில் அரசுப் பேருந்து மோதியதில் மூதாட்டி உயிரிழந்தாா்.

பா்கூா், தேவா்மலையைச் சோ்ந்தவா் மாதையன் மனைவி மாதி (70). விவசாய கூலித் தொழிலாளியான இவா், தேவா்மலை பேருந்து நிறுத்தத்தில் செவ்வாய்கிழமை பயணிகளை ஏற்றிக்கொண்டிருந்த அரசுப் பேருந்தை முன்புறமாக கடந்து செல்ல முயன்றுள்ளாா். அப்போது, பயணிகள் ஏறியதால் பேருந்து ஓட்டுநரான அந்தியூா், தவிட்டுப்பாளையத்தைச் சோ்ந்த சிங்காரவேலன் (51) பேருந்தை முன்னோக்கி இயக்கியுள்ளாா். இதில், பேருந்து சக்கரம் ஏறியதில் மாதி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தாா்.

இச்சம்பவம் குறித்து பா்கூா் போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா்.