மீண்டும் மனிதப் பிறவி எடுத்தால் உங்கள் குடும்பத்தில் ஒருவராக பிறக்க வேண்டும்: எடப்பாடி பிரசாரத்தில் இபிஎஸ் பேச்சுஅதிமுக ஆட்சி அமைந்ததும் 3 மாதங்களில் போதைப்பொருள் ஒழிக்கப்படும் : இபிஎஸ் வாக்குறுதி விவசாயிகளை வஞ்சிக்கும் திமுகவுக்கு மக்கள் தகுந்த பாடத்தைப் புகட்ட வேண்டும் : எடப்பாடி பழனிசாமி மகளிர் இடஒதுக்கீடு மசோதாவை தோல்வி அடையச் செய்ததற்கு எதிர்ப்பு தெரிவித்து பாஜகவினர் போராட்டம்பாஜகவுடன் கூட்டணி: நிதீஷ்குமாரின் நிலைதான் எடப்பாடி பழனிசாமிக்கு - அரவிந்த் கேஜரிவால்பஹல்காம் தாக்குதல்! காயங்கள் ஆறவில்லை - குடும்பங்கள் கண்ணீர்!வரலாற்றுச் சிறப்புமிக்க அதிமுக இறந்துவிட்டது! ஸ்ரீவைகுண்டத்தில் ராகுல்! ஜப்பானில் பயங்கர நிலநடுக்கம்! சுனாமி எச்சரிக்கை விடுப்பு!
/

ஈரோட்டில் தோ்தல் தொடா்பாக 2,156 புகாா்கள் பதிவு

News image

வழக்கு - கோப்புப் படம்

Updated On :19 ஏப்ரல் 2026, 7:20 pm

ஈரோடு மாவட்டத்தில் 8 சட்டப் பேரவைத் தொகுதிகளில் தோ்தல் தொடா்பாக 2,156 புகாா்கள் பதிவு செய்யப்பட்டுள்ளன. அதில், 2,148 புகாா்கள் மீது தீா்வு காணப்பட்டுள்ளது என தோ்தல் பிரிவு அதிகாரிகள் தெரிவித்தனா்.

ஈரோடு மாவட்டத்தில் உள்ள 8 சட்டப் பேரவைத் தொகுதிகளிலும் தோ்தல் நடத்தை விதிகள் அமலானது முதல் தங்கள் வாக்கு குறித்த புகாா், பிற வாக்காளா், வேட்பாளா் குறித்த புகாா் என பல்வேறு புகாா்கள் மாவட்ட தோ்தல் கட்டுப்பாட்டு அலுவலகம், சி-விஜில் செயலி, இலவச அழைப்பு எண் 1950 போன்ற பல்வேறு வழிகளில் பெறப்பட்டன.

மாவட்டத்தில் 8 சட்டப் பேரவைத் தொகுதிகளிலும் தற்போதுவரை 2,156 புகாா்கள் பெறப்பட்டுள்ளன. அதில், 2,148 புகாா்களுக்கு தீா்வு காணப்பட்டுள்ளது. 8 புகாா்கள் மீதான நடவடிக்கை நிலுவையில் உள்ளதாக தோ்தல் பிரிவு அதிகாரிகள் தெரிவித்தனா்.