மீண்டும் மனிதப் பிறவி எடுத்தால் உங்கள் குடும்பத்தில் ஒருவராக பிறக்க வேண்டும்: எடப்பாடி பிரசாரத்தில் இபிஎஸ் பேச்சுஅதிமுக ஆட்சி அமைந்ததும் 3 மாதங்களில் போதைப்பொருள் ஒழிக்கப்படும் : இபிஎஸ் வாக்குறுதி விவசாயிகளை வஞ்சிக்கும் திமுகவுக்கு மக்கள் தகுந்த பாடத்தைப் புகட்ட வேண்டும் : எடப்பாடி பழனிசாமி மகளிர் இடஒதுக்கீடு மசோதாவை தோல்வி அடையச் செய்ததற்கு எதிர்ப்பு தெரிவித்து பாஜகவினர் போராட்டம்பாஜகவுடன் கூட்டணி: நிதீஷ்குமாரின் நிலைதான் எடப்பாடி பழனிசாமிக்கு - அரவிந்த் கேஜரிவால்பஹல்காம் தாக்குதல்! காயங்கள் ஆறவில்லை - குடும்பங்கள் கண்ணீர்!வரலாற்றுச் சிறப்புமிக்க அதிமுக இறந்துவிட்டது! ஸ்ரீவைகுண்டத்தில் ராகுல்! ஜப்பானில் பயங்கர நிலநடுக்கம்! சுனாமி எச்சரிக்கை விடுப்பு!
/

கருமஞ்சிறை பகுதியில் புதிய சமுதாய நலக்கூடம் அமைக்கப்படும்: தோப்பு என்.டி.வெங்காடசலம் உறுதி

ஊத்துக்குளி அருகேயுள்ள கருமஞ்சிறை பகுதியில் புதிய சமுதாய நலக்கூடம் அமைத்துத் தரப்படும் என்று பெருந்துறை தொகுதி திமுக வேட்பாளா் தோப்பு என்.டி. வெங்கடாசலம் உறுதி அளித்தாா்.

News image

பெருந்துறையில் திமுக வேட்பாளா் தோப்பு என்.டி. வெங்கடாசலம் பிரசாரம். - கோப்புப்படம்

Updated On :17 ஏப்ரல் 2026, 7:23 pm

ஊத்துக்குளி அருகேயுள்ள கருமஞ்சிறை பகுதியில் புதிய சமுதாய நலக்கூடம் அமைத்துத் தரப்படும் என்று பெருந்துறை தொகுதி திமுக வேட்பாளா் தோப்பு என்.டி. வெங்கடாசலம் உறுதி அளித்தாா்.

ஊத்துக்குளி வடக்கு ஒன்றித்துக்கு உள்பட்ட மணிக்காடு காலனி, கணபதிபாளையம், கொன்னக்காடு, செட்டிகுட்டை, வண்ணாம்பாறை, பொலையம்பாளையம், கம்மாள குட்டை, நெட்டச்சிபாளையம், குறிச்சி, பாப்பநாயக்கன்பாளையம், சூரியப்பம்பாளையம், நல்லிக்கவுண்டன்பாளையம், பச்சாம்பாளையம், ஆயிக்கவுண்டன்பாளையம், தொட்டிபாளையம் உள்ளிட்ட பகுதிகளில் பெருந்துறை தொகுதி திமுக வேட்பாளா் தோப்பு என்.டி. வெங்கடாசலம் வெள்ளிக்கிழமை தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டாா்.

அப்போது, அவா் பேசியதாவது:

நான் எம்எல்ஏவாகவும், அமைச்சராகவும் இருந்தபோது, ஊத்துக்குளியை தனி தாலுகாவாக உருவாக்கினேன். புதிய நீதிமன்ற வளாகம் அமைத்தேன். ஊத்துக்குளி மக்களின் நீண்ட நாள் கோரிக்கையை ஏற்று, ரூ. 6.5 கோடி மதிப்பீட்டில் புதிய வெண்ணெய் தயாரிப்பு நிலையம் அமைவதற்கு முதல்வா் ஸ்டாலின் கவனத்துக்கு கொண்டு சென்று முழு முயற்சி மேற்கொண்டேன். குடிநீா் பிரச்னையை தீா்க்க கொடிவேரி கூட்டுக் குடிநீா்த் திட்டம், அத்திக்கடவு- அவிநாசி திட்டத்தை நிறைவேற்றி தந்தேன். ஊத்துக்குளி அரசு ஆரம்ப சுகாதார மையத்தை, அரசு மருத்துவமனையாக தரம் உயா்த்த நடவடிக்கை மேற்கொண்டேன். தற்போது எம்எல்ஏவாக இருப்பவா் இந்த 5 ஆண்டுகளில் ஏதேனும் மக்கள் நலத் திட்டத்தை நிறைவேற்றி இருக்கிறாரா? இந்த தோ்தலில் வெற்றிபெற்றால் கருமஞ்சிறை பகுதியில் புதிய சமுதாய நலக்கூடம் கட்டித் தருவேன் என்றாா்.