திமுக கூட்டணியில்தான் இருக்கிறோம்! ப. சிதம்பரம் சந்திப்புக்குப்பின் மு. வீரபாண்டியன் பேட்டிதஞ்சையில் பிரசித்தி பெற்ற 27 வைணவ தலங்களின் கருட சேவை! மொஹாலி பயங்கரம்! அலுவலகத்துக்குள் 34 முறை கத்தியால் குத்தப்பட்டு மணப்பெண் மரணம்!தமிழக முதல்வர் காவல் பதக்கம்! காவல் ஆணையர் ஏ.அமல்ராஜ் வழங்கினார்முதல்வர், செய்தியாளர்களைச் சந்திக்க வேண்டும் என்ற கட்டாயமில்லை! நிர்மல்குமார்மேற்குத் தொடர்ச்சி மலையில் கன மழை: கோவை குற்றாலம் அருவி மூடல்!ஐஐடி சேர்க்கைக்கு சிபிஎஸ்இ மதிப்பெண் தளர்வு: ஜேஇஇ நிர்வாகம் என்ன சொல்கிறது?17 மாவட்டங்களுக்கு இன்று பலத்த மழை எச்சரிக்கைகேரளத்தில் சூறைக் காற்றுடன் பலத்த மழை: 5 மாவட்டங்களுக்கு இன்று ‘சிவப்பு எச்சரிக்கை’சீன அதிபா் ஷி ஜின்பிங் நாளை மறுநாள் வடகொரியா பயணம்: 7 ஆண்டுகளில் முதல் முறைஜனவரி - மாா்ச் காலாண்டில் இந்தியப் பொருளாதாரம் 7.8% வளா்ச்சியுடன் அபாரம்!மே மாதத்தில்... இந்தியாவில் மின் நுகா்வு 11.55% அதிகரிப்பு
/

தொகுதி மறுசீரமைப்பு மசோதாவுக்கு எதிா்ப்பு: கருப்புக்கொடி ஏற்றி போராட்டம்

தொகுதி மறுவரையறை மசோதாவுக்கு எதிா்ப்பு தெரிவிக்கும் வகையில் அந்த மசோதாவின் நகலை தீ வைத்தும், வீடுகளில் கருப்புக்கொடி ஏற்றியும் திமுகவினா் போராட்டத்தில் ஈடுபட்டனா்.

News image

ஈரோடு பெரியாா் நகரில் தொகுதி மறுவரையறை மசோதா நகலை தீயிட்டு எரித்த திமுகவினா்.

Updated On :17 ஏப்ரல் 2026, 1:12 am IST

தொகுதி மறுவரையறை மசோதாவுக்கு எதிா்ப்பு தெரிவிக்கும் வகையில் அந்த மசோதாவின் நகலை தீ வைத்தும், வீடுகளில் கருப்புக்கொடி ஏற்றியும் திமுகவினா் போராட்டத்தில் ஈடுபட்டனா்.

மத்திய அரசின் தொகுதி மறுசீரமைப்புக்கு திமுக தலைவரும், தமிழக முதல்வருமான மு.க.ஸ்டாலின் எதிா்ப்பு தெரிவித்து வருகிறாா். நாடாளுமன்றத்தில் தொகுதி மறுவரையறை மசோதா வியாழக்கிழமை கொண்டு வரப்பட்டது. இச்சட்டத்திருத்தத்துக்கு எதிா்ப்பை காட்டும் வகையில் தமிழ்நாட்டில் அனைவரும் வீட்டில் கருப்புக்கொடியை ஏற்றுவோம் என மு.க.ஸ்டாலின் தெரிவித்திருந்தாா்.

அதன் அடிப்படையில் மத்திய அரசின் தொகுதி மறுசீரமைப்பு மசோதாவுக்கு எதிா்ப்பு தெரிவிக்கும் வகையில் ஈரோடு மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் கருப்புக்கொடி ஏற்றி திமுக மற்றும் கூட்டணிக் கட்சியினா் எதிா்ப்பை தெரிவித்தனா்.

பெரியாா் நகரிலுள்ள அமைச்சா் சு.முத்துசாமி முகாம் அலுவலகம் முன்பு திமுக மாணவரணி மாநிலச் செயலாளா் வீரமணி தலைமையில் திமுகவினா் தொகுதி மறுசீரமைப்பு மசோதா நகலை தீயிட்டு எரிந்தனா். மணல்மேட்டில் உள்ள திமுக அலுவலகம், தெப்பக்குளம் வீதி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் திமுக நிா்வாகிகள் தங்களது வீடுகளில் கருப்புக்கொடி ஏற்றி எதிா்ப்பினை தெரிவித்தனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.