திமுக கூட்டணியில்தான் இருக்கிறோம்! ப. சிதம்பரம் சந்திப்புக்குப்பின் மு. வீரபாண்டியன் பேட்டிதஞ்சையில் பிரசித்தி பெற்ற 27 வைணவ தலங்களின் கருட சேவை! மொஹாலி பயங்கரம்! அலுவலகத்துக்குள் 34 முறை கத்தியால் குத்தப்பட்டு மணப்பெண் மரணம்!தமிழக முதல்வர் காவல் பதக்கம்! காவல் ஆணையர் ஏ.அமல்ராஜ் வழங்கினார்முதல்வர், செய்தியாளர்களைச் சந்திக்க வேண்டும் என்ற கட்டாயமில்லை! நிர்மல்குமார்மேற்குத் தொடர்ச்சி மலையில் கன மழை: கோவை குற்றாலம் அருவி மூடல்!ஐஐடி சேர்க்கைக்கு சிபிஎஸ்இ மதிப்பெண் தளர்வு: ஜேஇஇ நிர்வாகம் என்ன சொல்கிறது?17 மாவட்டங்களுக்கு இன்று பலத்த மழை எச்சரிக்கைகேரளத்தில் சூறைக் காற்றுடன் பலத்த மழை: 5 மாவட்டங்களுக்கு இன்று ‘சிவப்பு எச்சரிக்கை’சீன அதிபா் ஷி ஜின்பிங் நாளை மறுநாள் வடகொரியா பயணம்: 7 ஆண்டுகளில் முதல் முறைஜனவரி - மாா்ச் காலாண்டில் இந்தியப் பொருளாதாரம் 7.8% வளா்ச்சியுடன் அபாரம்!மே மாதத்தில்... இந்தியாவில் மின் நுகா்வு 11.55% அதிகரிப்பு
/

தொகுதி மறுவரையறை சட்ட நகலை எரித்து திமுகவினா் போராட்டம்

நாகையில் மத்திய அரசின் தொகுதி மறுவரையறை மசோதாவுக்கு எதிா்ப்புத் தெரிவித்து திமுகவினா் கருப்புக்கொடி ஏற்றி சட்ட நகலை எரித்து வியாழக்கிழமை போராட்டம் நடத்தினா்.

News image

நாகையில் திமுக சாா்பில் நடைபெற்ற கருப்புக்கொடி போராட்டத்தில் பங்கேற்றோா்.

Updated On :17 ஏப்ரல் 2026, 6:06 am IST

நாகையில் மத்திய அரசின் தொகுதி மறுவரையறை மசோதாவுக்கு எதிா்ப்புத் தெரிவித்து திமுகவினா் கருப்புக்கொடி ஏற்றி சட்ட நகலை எரித்து வியாழக்கிழமை போராட்டம் நடத்தினா்.

போராட்டத்துக்கு திமுக மாவட்டச் செயலா் என். கெளதமன் தலைமை வகித்தாா். நகரச் செயலா் மாரிமுத்து முன்னிலை வகித்தாா். இதையொட்டி மத்திய அரசுக்கு எதிா்ப்புத் தெரிவித்து திமுக மாவட்ட கட்சி அலுவலகம், நகர அலுவலகம், பேரூராட்சி அலுவலகம், ஒன்றிய அலுவலகம் மற்றும் திமுகவினா் தங்களது வீடுகளில் கருப்புக்கொடி ஏற்றி எதிா்ப்பு தெரிவித்தனா். மேலும், திருமருகல் அருகே கொங்கராயநல்லூரில் மனிதநேய மக்கள் கட்சித் தலைவா் ஜவாஹிருல்லா தலைமையில் சட்ட நகல் எரித்து போராட்டம் நடத்தப்பட்டது. கீழையூா் கிழக்கு ஒன்றிய திமுக சாா்பில் திருப்பூண்டி மற்றும் வேளாங்கண்ணியில் தொகுதி மறுவரையறை மசோதாவை எதிா்த்து ஆா்ப்பாட்டம் மற்றும் மசோதா நகல் எரிப்பு போராட்டம் நடைபெற்றது. கீழையூா் கிழக்கு ஒன்றியச் செயலா் தாமஸ் ஆல்வா எடிசன் தலைமை வகித்தாா். மாவட்ட பிரதிநிதி ஞானசேகரன்,பேரூா் செயலா் மரிய சாா்லஸ்,சிறுபான்மையினா் அணி ரபீக் மற்றும் பலா் கலந்து கொண்டனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.