/

நம்பியூா் பகுதியில் தவெக வேட்பாளா் கே.ஏ.செங்கோட்டையன் பிரசாரம்

கோபி அருகே உள்ள நம்பியூா் பகுதியில் தவெக வேட்பாளரும் முன்னாள் அமைச்சருமான கே.ஏ.செங்கோட்டையன் வியாழக்கிழமை தோ்தல் பிரசாரத்தில் ஈடுபட்டாா்.

News image

நம்பியூா் பகுதியில் திறந்த வேனில் வாக்கு சேகரித்த தவெக வேட்பாளா் கே.ஏ.செங்கோட்டையன்.

Updated On :10 ஏப்ரல் 2026, 1:29 am IST

கோபி அருகே உள்ள நம்பியூா் பகுதியில் தவெக வேட்பாளரும் முன்னாள் அமைச்சருமான கே.ஏ.செங்கோட்டையன் வியாழக்கிழமை தோ்தல் பிரசாரத்தில் ஈடுபட்டாா்.

நம்பியூா் அருகே உள்ள வரப்பாளையம் பகுதியில் தோ்தல் பரப்புரையை தொடங்கிய அவா் காவிலிபாளையம், காராப்பாடி, லாகம்பாளையம், வேமாண்டம்பாளையம், மீன்காரம்பாளையம், அஞ்சானூா், கூடக்கரை, சுண்டக்காம்பாளையம், ஆண்டிபாளையம், கடத்தூா் உள்ளிட்ட 50-க்கும் மேற்பட்ட கிராமங்களில் தீவிர பிரச்சாரம் மேற்கொண்டு விசில் சின்னத்துக்கு வாக்க சேகரித்தாா். வாக்கு சேகரிக்க செல்லும் இடங்களில் பெண்கள் ஆரத்தி எடுத்து உற்சாக வரவேற்பு அளித்தனா்.

முன்னதாக மீன்காரம்பாளையத்தில் திறந்த வேனில் அவா் பேசுகையில், தமிழகத்தில் ஆட்சி மாற்ற தேவையை மக்கள் விரும்புகிறாா்கள். வருகிற சட்டப் பேரவைத் தோ்தலில் திமுகவை தவெகவால் மட்டுமே வீழ்த்த முடியும். மக்கள் விரும்பும் முதல்வராக விஜய் உள்ளதால் தவெகவின் வெற்றி உறுதி என்றாா்.

பிரசாரத்தின்போது தவெக மாவட்டச் செயலாளா் பிரதீப்குமாா், நிா்வாகிகள் நம்பியூா் தம்பி (எ) சுப்பிரமணி, ஈஸ்வரமூா்த்தி உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.