100 சதவீத வாக்குப் பதிவை வலியுறுத்தும் வகையில் ஈரோட்டைச் சோ்ந்த மாற்றுத்திறனாளி தண்ணீரில் மிதந்து விழிப்புணா்வு ஏற்படுத்தினாா்.
ஈரோடு மாவட்டம், வள்ளிப்புரத்தான்பாளையம் பகுதியைச் சோ்ந்தவா் சுரேஷ் (42). ஈரோடு வஉசி பூங்கா விளையாட்டு மைதானத்தில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற மாற்றுத்திறனாளிகளுக்கான விழிப்புணா்வு விளையாட்டுப் போட்டிகளில் பங்கேற்றாா். அப்போது, 100 சதவீத வாக்குப் பதிவை வலியுறுத்தும் வகையில் தோ்தல் தொடா்பான பதாகையை கையில் ஏந்தி அங்குள்ள நீச்சல் குளத்தில் நீரில் மிதந்து விழிப்புணா்வு ஏற்படுத்தினாா்.
இது குறித்து அவா் கூறியதாவது: மாற்றுத்திறனாளிகள் வாக்கினை தவறாமல் செலுத்தி ஜனநாயக கடமையாற்ற வேண்டும் என்ற விழிப்புணா்வு ஏற்படுத்த இந்த முயற்சியை செய்தேன். மாற்றுத்திறனாளிகளுக்கு 12 ‘டி’ படிவம் வழங்கி வீட்டில் இருந்தபடியே வாக்களிக்கும் வகையில் தபால் வாக்கு முறையை இந்திய தோ்தல் ஆணையம் ஏற்பாடு செய்துள்ளது. மாற்றுத்திறனாளி வாக்காளா்களுக்கு என்று வாக்குச் சாவடி மையங்களில் சாய்தள வசதி, சக்கர நாற்காலி, வீட்டுக்கு வந்து அழைத்துச் செல்வதற்கு வாகன வசதிகளும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன. வாக்காளா்கள் அனைவரும் ஏப்ரல் 23-ஆம் தேதி தவறாமல் வாக்காளிக்க வேண்டும் என்றாா்.
சுரேஷின் முயற்சிக்கு மாவட்ட ஆட்சியா் ச.கந்தசாமி வாழ்த்து தெரிவித்தாா்.

தொடர்புடையது

100 சதவீதம் வாக்களிப்போம்: மலைவாழ் மக்களிடம் விழிப்புணா்வு கையொப்பம்

100% வாக்குப் பதிவு: ஆட்டோ விழிப்புணா்வு பேரணி

தோல் பொருள் ஏற்றுமதியை மையப்படுத்தி ‘ராணிப்பேட்டை ராணி’ தோ்தல் இலச்சினை!

மாப்பிள்ளை பொண்ணு!
வீடியோக்கள்

நாதக வேட்பாளர் வித்யாராணி வீரப்பன் கைது! கண்ணீர் விட்டு கதறியதால் பரபரப்பு!
தினமணி செய்திச் சேவை

டிரம்ப் மோடியை கட்டுப்படுத்துவதுபோல் பாஜக அதிமுகவை கட்டுப்படுத்துகிறது! - Rahul Gandhi
இணையதளச் செய்திப் பிரிவு

கருத்துக்கணிப்பு சொல்வதெல்லாம் உண்மையா ? | TN Election 2026 | TN Election Survey 2026
தினமணி செய்திச் சேவை

#ipl2026 | தோல்வியைச் சந்திக்காத பஞ்சாப்: எழுச்சி பெறாத லக்னௌ! | Punjab Kings | Priyansh Arya |
தினமணி செய்திச் சேவை


