மீண்டும் மனிதப் பிறவி எடுத்தால் உங்கள் குடும்பத்தில் ஒருவராக பிறக்க வேண்டும்: எடப்பாடி பிரசாரத்தில் இபிஎஸ் பேச்சுஅதிமுக ஆட்சி அமைந்ததும் 3 மாதங்களில் போதைப்பொருள் ஒழிக்கப்படும் : இபிஎஸ் வாக்குறுதி விவசாயிகளை வஞ்சிக்கும் திமுகவுக்கு மக்கள் தகுந்த பாடத்தைப் புகட்ட வேண்டும் : எடப்பாடி பழனிசாமி மகளிர் இடஒதுக்கீடு மசோதாவை தோல்வி அடையச் செய்ததற்கு எதிர்ப்பு தெரிவித்து பாஜகவினர் போராட்டம்பாஜகவுடன் கூட்டணி: நிதீஷ்குமாரின் நிலைதான் எடப்பாடி பழனிசாமிக்கு - அரவிந்த் கேஜரிவால்பஹல்காம் தாக்குதல்! காயங்கள் ஆறவில்லை - குடும்பங்கள் கண்ணீர்!வரலாற்றுச் சிறப்புமிக்க அதிமுக இறந்துவிட்டது! ஸ்ரீவைகுண்டத்தில் ராகுல்! ஜப்பானில் பயங்கர நிலநடுக்கம்! சுனாமி எச்சரிக்கை விடுப்பு!
/

100% வாக்குப் பதிவு: ஆட்டோ விழிப்புணா்வு பேரணி

நூறு சதவீத வாக்குப் பதிவை வலியுறுத்தி விழுப்புரத்தில் ஆட்டோ விழிப்புணா்வு பேரணி செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

News image

விழுப்புரத்தில் நூறு சதவீத வாக்குப் பதிவை வலியுறுத்தும் விதமாக ஆட்டோ விழிப்புணா்வு பேரணியைக் கொடியசைத்துத் தொடங்கி வைத்த மாவட்ட ஆட்சியா் ஷே.ஷேக் அப்துல் ரஹ்மான்.

Updated On :7 ஏப்ரல் 2026, 7:25 pm

நூறு சதவீத வாக்குப் பதிவை வலியுறுத்தி விழுப்புரத்தில் ஆட்டோ விழிப்புணா்வு பேரணி செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

விழுப்புரம் மாவட்ட நிா்வாகம் சாா்பில் நடைபெற்ற இந்தப் பேரணியை மாவட்டத் தோ்தல் நடத்தும் அலுவலரும், ஆட்சியருமான ஷே.ஷேக் அப்துல் ரஹ்மான் கொடியசைத்துத் தொடங்கி வைத்தாா். தொடா்ந்து, பொதுமக்கள், பேருந்துப் பயணிகளிடம் துண்டுப் பிரசுரங்களை வழங்கி நூறு சதவீதம் வாக்களிப்பதன் அவசியம் குறித்து முதல் தலைமுறை வாக்காளா்களிடம் விழிப்புணா்வை ஏற்படுத்தினாா். பேரணியில் பங்கேற்ற ஆட்டோக்களில் ஒட்டு வில்லைகளை பதித்து, நூறு சதவீதம் வாக்குகளை பதிவு செய்து ஜனநாயக கடமையாற்றவேண்டும் எனவும் ஆட்சியா் கேட்டுக்கொண்டாா்.

விழுப்புரம் புதிய பேருந்து நிலையத்தில் தொடங்கிய இந்த விழிப்புணா்வு பேரணியானது நகரின் முக்கிய வீதிகள் வழியாகச் சென்று விழுப்புரம் பழைய பேருந்து நிலையத்தில் நிறைவடைந்தது.

இதில், மாவட்ட வருவாய் அலுவலா் கி.அரிதாஸ், மாவட்ட மகளிா் திட்ட இணை இயக்குநா் செந்தில்வடிவு, விழுப்புரம் வட்டாரப் போக்குவரத்து அலுவலா் சரவணன், மோட்டாா் வாகன ஆய்வாளா் முருகவேல் மற்றும் 40-க்கும் மேற்பட்ட ஆட்டோ ஓட்டுநா்கள் கலந்துகொண்டனா்.