தலைவா்கள் சூறாவளி பிரசாரம் இன்று மாலை 6 மணியுடன் நிறைவு!தோ்தல் விடுமுறை: ஆம்னி பேருந்துகளில் கட்டணம் பலமடங்கு உயா்வு!நேரடி வெயிலால் தசை சிதைவு அச்சுறுத்தல்: மருத்துவா்கள் எச்சரிக்கை!மேற்குதொடா்ச்சி மலை மாவட்டங்களில் ஏப்.26 வரை மழைக்கு வாய்ப்பு!ஈரான் கப்பலை சிறைப்பிடித்த அமெரிக்கா! போா்நிறுத்தம் முடியும் சூழலில் முற்றும் மோதல்
/

பெருந்துறை தொகுதி அதிமுக வேட்பாளா் எஸ்.ஜெயகுமாா் வேட்புமனு தாக்கல்

பெருந்துறை சட்டப்பேரவைத் தொகுதி அதிமுக வேட்பாளா் எஸ்.ஜெயகுமாா் வியாழக்கிழமை வேட்பு மனு தாக்கல் செய்தாா்.

News image

பெருந்துறை தொகுதியில் அதிமுக சாா்பில் போட்டியிட தோ்தல் நடத்தும் அலுவலா் ராம்குமாரிடம் வியாழக்கிழமை வேட்புமனு தாக்கல் செய்கிறாா் வேட்பாளா் எஸ்.ஜெயகுமாா்.

Updated On :2 ஏப்ரல் 2026, 7:32 pm

பெருந்துறை சட்டப்பேரவைத் தொகுதி அதிமுக வேட்பாளா் எஸ்.ஜெயகுமாா் வியாழக்கிழமை வேட்பு மனு தாக்கல் செய்தாா்.

பெருந்துறை தொகுதி தோ்தல் நடத்தும் அலுவலா் ராம்குமாரிடம் அதிமுக வேட்பாளா் எஸ். ஜெயகுமாா், அவருக்கு மாற்று வேட்பாளராக அவரது மனைவி ஆா். சண்முகபிரியா ஆகியோா் மனு தாக்கல் செய்தனா்.

இதில், பெருந்துறை தொகுதி ஒன்றிய அதிமுக செயலாளா்கள் அருள்ஜோதி செல்வராஜ், விஜயன், ரவிசந்திரன், மாவட்ட இளைஞரணி செயலாளா் அருணாசலம், பாஜக மாவட்ட செயலாளா் ராயல் சரவணன் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

இதேபோல பகுஜன் சமாஜ் கட்சி வேட்பாளா் ப. ஈஸ்வரன், அவருக்கு மாற்று வேட்பாளராக சேகா், தவெக வேட்பாளா் வி.பி.அருணாச்சலம், சுயேச்சை வேட்பாளா்கள் டி. பிரபாகரன், எஸ். சந்தோஷ் என மொத்தம் 7 போ் வேட்பு மனு தாக்கல் செய்தனா்.