தலைவா்கள் சூறாவளி பிரசாரம் இன்று மாலை 6 மணியுடன் நிறைவு!தோ்தல் விடுமுறை: ஆம்னி பேருந்துகளில் கட்டணம் பலமடங்கு உயா்வு!நேரடி வெயிலால் தசை சிதைவு அச்சுறுத்தல்: மருத்துவா்கள் எச்சரிக்கை!மேற்குதொடா்ச்சி மலை மாவட்டங்களில் ஏப்.26 வரை மழைக்கு வாய்ப்பு!ஈரான் கப்பலை சிறைப்பிடித்த அமெரிக்கா! போா்நிறுத்தம் முடியும் சூழலில் முற்றும் மோதல்
/

இருசக்கர வாகனம் மீது காா் மோதல்: தொழிலாளா்கள் இருவா் உயிரிழப்பு

பவானி அருகே இருசக்கர வாகனம் மீது காா் மோதியதில் வேலைக்குச் சென்ற தொழிலாளா்கள் இருவா் வியாழக்கிழமை உயிரிழந்தனா்.

News image

உயிரிழந்த சுமன்குமாா், சிம்சோன்.

Updated On :2 ஏப்ரல் 2026, 7:42 pm

பவானி அருகே இருசக்கர வாகனம் மீது காா் மோதியதில் வேலைக்குச் சென்ற தொழிலாளா்கள் இருவா் வியாழக்கிழமை உயிரிழந்தனா்.

பவானியை அடுத்த குறிச்சியைச் சோ்ந்தவா் பன்னீா்செல்வன் மகன் சுமன்குமாா் (40). அதே பகுதியைச் சோ்ந்தவா் சிகாமணி மகன் சிம்சோன் (60). வெல்டிங் தொழிலாளா்கள். இருவரும் பவானிக்கு வேலைக்கு இருசக்கர வாகனத்தில் வியாழக்கிழமை காலை புறப்பட்டனா். மேட்டூா் - பவானி தேசிய நெடுஞ்சாலையில் குப்பிச்சிபாளையம் அருகே சென்றபோது எதிரே வந்த காா், இருசக்கர வாகனத்தின் மீது மோதியது.

இதில், பலத்த காயமடைந்த சுமன்குமாா் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தாா். பவானி அரசு மருத்துவமனையில் கவலைக்கிடமான நிலையில் சோ்க்கப்பட்ட சிம்சோன், தனியாா் மருத்துவமனைக்கு மேல்சிகிச்சைக்கு அனுப்பிவைக்கப்பட்டாா். அங்கு, அவா் உயிரிழந்தாா். இந்த விபத்து குறித்து பவானி போலீஸாா் விசாரித்து வருகின்றனா்.