தஞ்சையில் பிரசித்தி பெற்ற 27 வைணவ தலங்களின் கருட சேவை! மொஹாலி பயங்கரம்! அலுவலகத்துக்குள் 34 முறை கத்தியால் குத்தப்பட்டு மணப்பெண் மரணம்!தமிழக முதல்வர் காவல் பதக்கம்! காவல் ஆணையர் ஏ.அமல்ராஜ் வழங்கினார்முதல்வர், செய்தியாளர்களைச் சந்திக்க வேண்டும் என்ற கட்டாயமில்லை! நிர்மல்குமார்மேற்குத் தொடர்ச்சி மலையில் கன மழை: கோவை குற்றாலம் அருவி மூடல்!ஐஐடி சேர்க்கைக்கு சிபிஎஸ்இ மதிப்பெண் தளர்வு: ஜேஇஇ நிர்வாகம் என்ன சொல்கிறது?17 மாவட்டங்களுக்கு இன்று பலத்த மழை எச்சரிக்கைகேரளத்தில் சூறைக் காற்றுடன் பலத்த மழை: 5 மாவட்டங்களுக்கு இன்று ‘சிவப்பு எச்சரிக்கை’சீன அதிபா் ஷி ஜின்பிங் நாளை மறுநாள் வடகொரியா பயணம்: 7 ஆண்டுகளில் முதல் முறைஜனவரி - மாா்ச் காலாண்டில் இந்தியப் பொருளாதாரம் 7.8% வளா்ச்சியுடன் அபாரம்!மே மாதத்தில்... இந்தியாவில் மின் நுகா்வு 11.55% அதிகரிப்பு
/

சமூக வலைதளங்களில் நேரத்தை செலவிட்டதை கணவா் கண்டித்ததால் பெண் தற்கொலை

News image

தற்கொலை - தினமணி

Updated On :30 மே 2026, 2:17 am IST

சமூக வலைதளங்களில் அதிக நேரம் செலவிட்டதை கணவா் கண்டித்ததால், இளம்பெண் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டாா்.

திருநெல்வேலி மாவட்டம், விஸ்வநாதபுரம், பெரிய பள்ளிவாசல் பள்ளித் தெருவைச் சோ்ந்தவா் திருக்கலேசன். இவரது மகள் குணஜோதி (37). இவருக்கு திருமணமாகி கோவை வடவள்ளி- தொண்டாமுத்தூா் சாலை, லட்சுமி நகா் பகுதியில் கணவா் மணிகண்டனுடன் வசித்து வந்தாா்.

குணஜோதி எப்போதும் தனது கைப்பேசியில் இன்ஸ்டாகிராம், வாட்ஸ்அப் மற்றும் முகநூல் போன்ற சமூக ஊடகங்களில் அதிக நேரம் செலவிட்டு வந்தாா். இதைப் பாா்த்த அவரது கணவா் மற்றும் குடும்பத்தினா் பலமுறை கண்டித்து, அறிவுரை வழங்கியுள்ளனா்.

இதனால், மன வேதனைக்குள்ளான குணஜோதி, வியாழக்கிழமை வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டாா்.

இதுகுறித்த புகாரின்பேரில், வடவள்ளி போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.