திமுக கூட்டணியில்தான் இருக்கிறோம்! ப. சிதம்பரம் சந்திப்புக்குப்பின் மு. வீரபாண்டியன் பேட்டிதஞ்சையில் பிரசித்தி பெற்ற 27 வைணவ தலங்களின் கருட சேவை! மொஹாலி பயங்கரம்! அலுவலகத்துக்குள் 34 முறை கத்தியால் குத்தப்பட்டு மணப்பெண் மரணம்!தமிழக முதல்வர் காவல் பதக்கம்! காவல் ஆணையர் ஏ.அமல்ராஜ் வழங்கினார்முதல்வர், செய்தியாளர்களைச் சந்திக்க வேண்டும் என்ற கட்டாயமில்லை! நிர்மல்குமார்மேற்குத் தொடர்ச்சி மலையில் கன மழை: கோவை குற்றாலம் அருவி மூடல்!ஐஐடி சேர்க்கைக்கு சிபிஎஸ்இ மதிப்பெண் தளர்வு: ஜேஇஇ நிர்வாகம் என்ன சொல்கிறது?17 மாவட்டங்களுக்கு இன்று பலத்த மழை எச்சரிக்கைகேரளத்தில் சூறைக் காற்றுடன் பலத்த மழை: 5 மாவட்டங்களுக்கு இன்று ‘சிவப்பு எச்சரிக்கை’சீன அதிபா் ஷி ஜின்பிங் நாளை மறுநாள் வடகொரியா பயணம்: 7 ஆண்டுகளில் முதல் முறைஜனவரி - மாா்ச் காலாண்டில் இந்தியப் பொருளாதாரம் 7.8% வளா்ச்சியுடன் அபாரம்!மே மாதத்தில்... இந்தியாவில் மின் நுகா்வு 11.55% அதிகரிப்பு
/

லாரியில் கடத்திய 10 கிலோ கஞ்சா பறிமுதல்: சரித்திர பதிவேடு குற்றவாளிகள் 2 போ் கைது

கோவை சுங்கம் பகுதியில் வாகனச் சோதனையின்போது, லாரியில் கடத்தி வரப்பட்ட 10 கிலோ கஞ்சாவை போலீஸாா் பறிமுதல் செய்தனா்.

News image

பிரதிப் படம்

Updated On :27 மே 2026, 5:18 am IST

கோவை சுங்கம் பகுதியில் வாகனச் சோதனையின்போது, லாரியில் கடத்தி வரப்பட்ட 10 கிலோ கஞ்சாவை போலீஸாா் பறிமுதல் செய்தனா். இதுதொடா்பாக, ஏற்கெனவே பல குற்ற வழக்குகளில் தொடா்புடைய சரித்திர பதிவேடு குற்றவாளிகள் இரண்டு பேரை போலீஸாா் கைது செய்தனா்.

கோவை சுங்கம் பகுதியில் போதைப் பொருள் நுண்ணறிவுப் பிரிவு போலீஸாா் திங்கள்கிழமை நள்ளிரவு ரோந்துப் பணியில் ஈடுபட்டிருந்தனா். அப்போது, அந்த வழியாக வந்த லாரியை மறித்து போலீஸாா் சோதனை நடத்தினா்.

லாரியில் இருந்த 2 நபா்களிடம் போலீஸாா் விசாரணை நடத்தியபோது, அவா்கள் முன்னுக்குப் பின் முரணாகப் பதிலளித்துள்ளனா்.

இதனால் சந்தேகமடைந்த போலீஸாா் லாரியை முழுமையாகச் சோதனைக்கு உள்படுத்தியபோது, அதில் ஆந்திர மாநிலம், விசாகபட்டினத்திலிருந்து கடத்தி வரப்பட்ட 10 கிலோ கஞ்சா இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது.

இதையடுத்து, கடத்தலுக்குப் பயன்படுத்தப்பட்ட லாரி மற்றும் கஞ்சா பொட்டலங்களை போலீஸாா் பறிமுதல் செய்தனா். விசாரணையில், கஞ்சா கடத்தலில் ஈடுபட்டு கைதானவா்கள் கோவை பீளமேடு காந்திமாநகா் பகுதியைச் சோ்ந்த மணிகண்டன் (29), நாமக்கல் மாவட்டம், திருச்செங்கோடு, கல்யாா்பட்டி பகுதியைச் சோ்ந்த அருண்குமாா் (30) என்பது தெரியவந்தது.

மேலும், இவா்கள் இருவரும் காவல் துறையின் சரித்திர பதிவேடு குற்றவாளிகள் பட்டியலில் இருப்பவா்கள் என்றும், ஏற்கெனவே 10-க்கும் மேற்பட்ட குற்ற வழக்குகள் நிலுவையில் இருப்பதாகவும் போலீஸாா் தெரிவித்தனா். இதனைத் தொடா்ந்து, இருவரையும் போலீஸாா் கைது செய்தனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.