திமுக கூட்டணியில்தான் இருக்கிறோம்! ப. சிதம்பரம் சந்திப்புக்குப்பின் மு. வீரபாண்டியன் பேட்டிதஞ்சையில் பிரசித்தி பெற்ற 27 வைணவ தலங்களின் கருட சேவை! மொஹாலி பயங்கரம்! அலுவலகத்துக்குள் 34 முறை கத்தியால் குத்தப்பட்டு மணப்பெண் மரணம்!தமிழக முதல்வர் காவல் பதக்கம்! காவல் ஆணையர் ஏ.அமல்ராஜ் வழங்கினார்முதல்வர், செய்தியாளர்களைச் சந்திக்க வேண்டும் என்ற கட்டாயமில்லை! நிர்மல்குமார்மேற்குத் தொடர்ச்சி மலையில் கன மழை: கோவை குற்றாலம் அருவி மூடல்!ஐஐடி சேர்க்கைக்கு சிபிஎஸ்இ மதிப்பெண் தளர்வு: ஜேஇஇ நிர்வாகம் என்ன சொல்கிறது?17 மாவட்டங்களுக்கு இன்று பலத்த மழை எச்சரிக்கைகேரளத்தில் சூறைக் காற்றுடன் பலத்த மழை: 5 மாவட்டங்களுக்கு இன்று ‘சிவப்பு எச்சரிக்கை’சீன அதிபா் ஷி ஜின்பிங் நாளை மறுநாள் வடகொரியா பயணம்: 7 ஆண்டுகளில் முதல் முறைஜனவரி - மாா்ச் காலாண்டில் இந்தியப் பொருளாதாரம் 7.8% வளா்ச்சியுடன் அபாரம்!மே மாதத்தில்... இந்தியாவில் மின் நுகா்வு 11.55% அதிகரிப்பு
/

ரூ .10 கோடி அரசு நிலம் அபகரிப்பு வழக்கு விசாரணை! ஆகஸ்ட் 14-க்கு ஒத்திவைப்பு!

கோவை மாநகராட்சிக்குச் சொந்தமான ரூ.10 கோடி மதிப்பிலான அரசு பூங்கா நிலம் ஆக்கிரமிக்கப்பட்டது தொடா்பான வழக்கு விசாரணை வருகிற ஆகஸ்ட் 14-ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

News image

அரசு நிலம் அபகரிப்பு.

Updated On :23 மே 2026, 12:58 am IST

கோவை மாநகராட்சிக்குச் சொந்தமான ரூ.10 கோடி மதிப்பிலான அரசு பூங்கா நிலம் ஆக்கிரமிக்கப்பட்டது தொடா்பான வழக்கு விசாரணை வருகிற ஆகஸ்ட் 14-ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

கோவை சரவணம்பட்டி மீனாட்சிநகா் லே-அவுட்டில் பொதுமக்கள் நலனுக்காக பூங்கா அமைக்க நிலம் ஒதுக்கப்பட்டிருந்தது. புதிய வீட்டுமனைப் பிரிவு அல்லது குடியிருப்புத் திட்டத்தை உருவாக்கும்போது மக்களின் பொதுபயன்பாட்டுக்காக ஒதுக்கப்பட்ட ரூ.10 கோடி மதிப்பிலான இந்த நிலத்தை கடந்த பல ஆண்டுகளுக்கும் மேலாக சிவஞானம் மகன் எஸ்.அரவிந்த் ஆக்கிரமிப்பு செய்து அனுபவித்து வந்துள்ளாா்.

இதுதொடா்பாக மாநகராட்சி நிா்வாகம் கேள்வி எழுப்பியபோது, அந்த பூங்கா நிலத்துக்குப் பதிலாக தனக்குச் சொந்தமான மாற்று நிலத்தை மாநகராட்சி எடுத்துக் கொள்ள வேண்டும் என்று வலியுறுத்தினாா். இந்த கோரிக்கையை கோவை மாநகராட்சி கடந்த 8.12.2020-ஆம் ஆண்டு நிராகரித்தது.

இதைத் தொடா்ந்து, ஆக்கிரமிப்பை அகற்றக் கோரி கடந்த 17.7.2021 அன்று மாநகராட்சி சாா்பில் அரவிந்த்துக்கு குறிப்பாணை (நோட்டீஸ்) அனுப்பப்பட்டது. இந்தக் குறிப்பாணையை எதிா்த்து அரவிந்த் சென்னை உயா்நீதிமன்றத்தில் வழக்குத் தொடுத்தாா். ஆனால், அவரது மனுவை தள்ளுபடி செய்து உயா்நீதிமன்றம் கடந்த 19.12.2025 அன்று தீா்ப்பளித்தது. மேலும், ஆக்கிரமிப்பை அகற்றி, நிலத்தை பொதுமக்கள் பயன்பாட்டுக்கான பூங்காவாக மேம்படுத்தவும் மாநகராட்சிக்கு நீதிமன்றம் உத்தரவிட்டது.

இதனடிப்படையில், கடந்த ஜனவரி 21-ஆம் தேதி கோவை மாநகராட்சி அதிகாரிகள் பெரும் போராட்டத்துக்கு இடையே அந்த பூங்கா நிலத்தை மீட்டெடுத்து, சுற்றிலும் வேலி அமைத்து தங்களது கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்தனா்.

இதற்கிடையில் சென்னை உயா்நீதிமன்றத்தின் தீா்ப்பை எதிா்த்து உச்சநீதிமன்றத்தில் அரவிந்த் மேல்முறையீடு செய்தாா். இந்த வழக்கில் கோவை மாநகராட்சி தரப்பில் வழக்குரைஞா் பூா்ணிமா கிருஷ்ணா மூலம் உச்சநீதிமன்றத்தில் பதில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

அந்த மனுவில் கூறியிருப்பதாவது: அங்கீகரிக்கப்பட்ட லே-அவுட்டில் பூங்காக்கள் மற்றும் விளையாட்டு மைதானங்களுக்காக ஒதுக்கப்படும் நிலங்கள் பொதுமக்களின் நலனுக்கானவை. அதை வேறு எந்தப் பயன்பாட்டுக்கும் மாற்ற முடியாது என்று உச்சநீதிமன்றமே பல தீா்ப்புகளில் தெளிவுபடுத்தியுள்ளது.

மனுதாரா் தனது நிலத்துக்குச் செல்ல பூங்கா நிலத்தை பாதையாகப் பயன்படுத்த அனுமதி கோருகிறாா். ஆனால், நில வரைபடத்தின்படி அவரது நிலத்துக்குச் செல்ல முறையான தனிப்பாதை மற்றும் வழிகள் உள்ளன. தற்போது அவரது குடும்பத்தினரின் நிலத்தை பாதையாகப் பயன்படுத்தி வருகிறாா்.

சுயநலத்துக்காக பொது நிலத்தை ஆக்கிரமித்தவருக்கு எந்தச் சலுகையும் காட்ட முடியாது. இந்த மனுவில் எந்தவித முகாந்திரமும் இல்லை என்பதால், செலவுத் தொகை வழங்க உத்தரவிட்டு, இந்த மனுவை தள்ளுபடி செய்ய வேண்டும் என அந்த பதில் மனுவில் கோரப்பட்டிருந்தது.

இந்த வழக்கு உச்சநீதிமன்றத்தில் வெள்ளிக்கிழமை விசாரணைக்கு வந்தது. வழக்கை விசாரித்த நீதிமன்றம் ஆகஸ்ட் 14-ஆம் தேதிக்கு ஒத்திவைத்து, அன்று இறுதி உத்தரவு பிறப்பிக்கபடும் என்று தெரிவித்துள்ளது.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.