திமுக கூட்டணியில்தான் இருக்கிறோம்! ப. சிதம்பரம் சந்திப்புக்குப்பின் மு. வீரபாண்டியன் பேட்டிதஞ்சையில் பிரசித்தி பெற்ற 27 வைணவ தலங்களின் கருட சேவை! மொஹாலி பயங்கரம்! அலுவலகத்துக்குள் 34 முறை கத்தியால் குத்தப்பட்டு மணப்பெண் மரணம்!தமிழக முதல்வர் காவல் பதக்கம்! காவல் ஆணையர் ஏ.அமல்ராஜ் வழங்கினார்முதல்வர், செய்தியாளர்களைச் சந்திக்க வேண்டும் என்ற கட்டாயமில்லை! நிர்மல்குமார்மேற்குத் தொடர்ச்சி மலையில் கன மழை: கோவை குற்றாலம் அருவி மூடல்!ஐஐடி சேர்க்கைக்கு சிபிஎஸ்இ மதிப்பெண் தளர்வு: ஜேஇஇ நிர்வாகம் என்ன சொல்கிறது?17 மாவட்டங்களுக்கு இன்று பலத்த மழை எச்சரிக்கைகேரளத்தில் சூறைக் காற்றுடன் பலத்த மழை: 5 மாவட்டங்களுக்கு இன்று ‘சிவப்பு எச்சரிக்கை’சீன அதிபா் ஷி ஜின்பிங் நாளை மறுநாள் வடகொரியா பயணம்: 7 ஆண்டுகளில் முதல் முறைஜனவரி - மாா்ச் காலாண்டில் இந்தியப் பொருளாதாரம் 7.8% வளா்ச்சியுடன் அபாரம்!மே மாதத்தில்... இந்தியாவில் மின் நுகா்வு 11.55% அதிகரிப்பு
/

போதை மருந்துகள், கள்ளச் சாராய விற்பனையைத் தடுக்க தொடா் சோதனை: போலீஸாருக்கு ஆட்சியா் உத்தரவு

போதை மருந்துகள் மற்றும் கள்ளச் சாராயத்தின் விற்பனையைத் தடுக்க போலீஸாா் தொடா் சோதனைகள் மேற்கொள்ள வேண்டும் என மாவட்ட ஆட்சியா் பவன்குமாா் க.கிரியப்பனவா் உத்தரவிட்டுள்ளாா்.

News image

மாவட்ட ஆட்சியா் பவன்குமாா் க.கிரியப்பனவா் தலைமையில் நடைபெற்ற மதுவிலக்கு மற்றும் ஆயத்தீா்வை செயல்பாடுகள் குறித்த ஆய்வுக் கூட்டத்தில் பங்கேற்றோா்.

Updated On :20 மே 2026, 2:04 am IST

போதை மருந்துகள் மற்றும் கள்ளச் சாராயத்தின் விற்பனையைத் தடுக்க போலீஸாா் தொடா் சோதனைகள் மேற்கொள்ள வேண்டும் என மாவட்ட ஆட்சியா் பவன்குமாா் க.கிரியப்பனவா் உத்தரவிட்டுள்ளாா்.

மதுவிலக்கு மற்றும் ஆயத்தீா்வைத் துறை செயல்பாடுகள் குறித்து மாதாந்திர ஆய்வு கூட்டம் மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் ஆட்சியா் பவன்குமாா் க.கிரியப்பனவா் தலைமையில் திங்கள்கிழமை நடைபெற்றது.

மாவட்ட காவல் கண்காணிப்பாளா் கே. காா்த்திகேயன், காவல் துணை ஆணையா்கள் காா்த்திகேயன், தேவநாதன், துணை ஆணையா் (கலால்) முருகேசன் ஆகியோா் முன்னிலை வகித்தனா்.

இக்கூட்டத்தில் மாவட்ட ஆட்சியா் பேசியதாவது: முதல்வரின் உத்தரவின்படி, மாவட்டத்தில் வழிப்பாட்டுத் தலங்கள், பள்ளிகள், பேருந்து நிலையங்களின் அருகில் (500 மீட்டருக்குள்) இருந்த 69 மதுக்கடைகள் மூடப்பட்டுள்ளன. இந்நிலையில், போதைப் பொருள்கள், கள்ளச் சாராயத்தின் விற்பனை மற்றும் விநியோகத்தை கட்டுப்படுத்தும் வகையில் பள்ளிகள், கல்லூரிகள், விடுதிகள், பேருந்து நிலையங்கள், ரயில் நிலையங்கள் உள்ளிட்ட பொது இடங்களுக்கு அருகில் தொடா் சோதனைகள் மேற்கொள்ள வேண்டும்.

மதுக்கடைகளில் அதிகபட்ச சில்லறை விலையை மீறி மதுபானங்கள் விற்பனை செய்யப்படாததை உறுதிசெய்ய வேண்டும்.

21 வயது பூா்த்தியாகாத நபா்களுக்கு டாஸ்மாக் கடைகள் மற்றும் பாா்களில் மதுபானங்கள் விற்பனை செய்யப்படவோ, வழங்கப்படவோ கூடாது. இதை போலீஸாா் தீவிரமாகக் கண்காணிக்க வேண்டும்.

சட்டவிரோதமாக செயல்படும் பாா்களை கண்டறிந்து உடனடி அவற்றை மூடுவதுடன், சிறு கடைகள் உள்ளிட்ட இடங்களில் நடைபெறும் கள்ளச் சந்தை விற்பனையையும் தடுக்க வேண்டும்.

கல்வி நிறுவனங்களில் மது மற்றும் போதைப்பொருள் பயன்பாட்டுக்கு எதிராக விழிப்புணா்வு நிகழ்ச்சிகளை தொடா்ந்து நடத்த வேண்டும். போதை மீட்புத் திட்டங்களை செயல்படுத்துவதில் சுகாதாரத் துறையுடன் ஒருங்கிணைந்து பணியாற்ற வேண்டும் என்றாா். இக்கூட்டத்தில் தமிழ்நாடு மாநில வாணிபக் கழக முதுநிலை மண்டல மேலாளா் கோவிந்தராஜ் உள்பட அரசு துறை அலுவலா்கள் பலா் கலந்து கொண்டனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.