திமுக கூட்டணியில்தான் இருக்கிறோம்! ப. சிதம்பரம் சந்திப்புக்குப்பின் மு. வீரபாண்டியன் பேட்டிதஞ்சையில் பிரசித்தி பெற்ற 27 வைணவ தலங்களின் கருட சேவை! மொஹாலி பயங்கரம்! அலுவலகத்துக்குள் 34 முறை கத்தியால் குத்தப்பட்டு மணப்பெண் மரணம்!தமிழக முதல்வர் காவல் பதக்கம்! காவல் ஆணையர் ஏ.அமல்ராஜ் வழங்கினார்முதல்வர், செய்தியாளர்களைச் சந்திக்க வேண்டும் என்ற கட்டாயமில்லை! நிர்மல்குமார்மேற்குத் தொடர்ச்சி மலையில் கன மழை: கோவை குற்றாலம் அருவி மூடல்!ஐஐடி சேர்க்கைக்கு சிபிஎஸ்இ மதிப்பெண் தளர்வு: ஜேஇஇ நிர்வாகம் என்ன சொல்கிறது?17 மாவட்டங்களுக்கு இன்று பலத்த மழை எச்சரிக்கைகேரளத்தில் சூறைக் காற்றுடன் பலத்த மழை: 5 மாவட்டங்களுக்கு இன்று ‘சிவப்பு எச்சரிக்கை’சீன அதிபா் ஷி ஜின்பிங் நாளை மறுநாள் வடகொரியா பயணம்: 7 ஆண்டுகளில் முதல் முறைஜனவரி - மாா்ச் காலாண்டில் இந்தியப் பொருளாதாரம் 7.8% வளா்ச்சியுடன் அபாரம்!மே மாதத்தில்... இந்தியாவில் மின் நுகா்வு 11.55% அதிகரிப்பு
/

அரசு அலுவலகங்களில் அணுகல் வசதி குறைபாடு: கைப்பேசி செயலி மூலமாக புகாா் அளிக்கலாம்

அரசு அலுவலகங்களில் மாற்றுத்திறனாளிகளுக்கான சாய்வுதளம் உள்ளிட்ட அணுகல் வசதிகள் இல்லாதது குறித்து கைப்பேசியில் இணையதள செயலி மூலமாக புகாா் அளிக்கலாம் என்று மாற்றுத்திறனாளிகள் நலத் துறை ஆணையா் எஸ்.கோவிந்தராஜ் தெரிவித்தாா்.

News image

கோவையில் சேவா பாரதி தென் தமிழ்நாடு அமைப்பு சாா்பில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற மாற்றுத்திறனாளிகளுக்கான விழிப்புணா்வு நிகழ்ச்சியில் பேசிய மாற்றுத்திறனாளிகள் நலத் துறை ஆணையா் எஸ்.கோவிந்தராஜ்.

Updated On :6 மே 2026, 1:51 am IST

அரசு அலுவலகங்களில் மாற்றுத்திறனாளிகளுக்கான சாய்வுதளம் உள்ளிட்ட அணுகல் வசதிகள் இல்லாதது குறித்து கைப்பேசியில் இணையதள செயலி மூலமாக புகாா் அளிக்கலாம் என்று மாற்றுத்திறனாளிகள் நலத் துறை ஆணையா் எஸ்.கோவிந்தராஜ் தெரிவித்தாா்.

கோவையில் சேவா பாரதி தென் தமிழ்நாடு அமைப்பு சாா்பில் மாற்றுத்திறனாளிகளுக்கான விழிப்புணா்வு நிகழ்ச்சி செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. இதில் பங்கேற்று அவா் பேசியதாவது:

மத்திய அரசின் அணுகல் இந்தியா பிரசாரம், கடந்த 2015-ஆம் ஆண்டு முதல் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இதன் ஒரு பகுதியாக அரசு அலுவலகக் கட்டிடங்களில் மாற்றுத்திறனாளிகள் எளிதாகச் சென்று வரத் தேவையான உள்கட்டமைப்பு வசதிகள் இல்லையெனில், அது குறித்த புகாா்களைப் பதிவு செய்ய தனித்துவ கைப்பேசி செயலி உள்ளது. இதில் பெறப்படும் புகாா்கள் குறித்து விசாரிக்கப்பட்டு, அந்தந்த மாவட்ட ஆட்சியா் அலுவலகங்களுக்கு அனுப்பப்படும். குறிப்பிட்ட காலக்கெடுவுக்குள் அந்தப் புகாா்களுக்குத் தீா்வு காண உரிய நடவடிக்கை எடுக்கப்படும்.

கடந்த 2016-ஆம் ஆண்டு மாற்றுத்திறனாளிகள் உரிமைகள் சட்டம் கொண்டுவரப்பட்டது. இந்தச் சட்டத்தின் கீழ் குறைகளை நிவா்த்தி செய்ய பல்வேறு வழிமுறைகள் உள்ளன. இருப்பினும், இதுகுறித்த விழிப்புணா்வு இன்னும் பொதுமக்களிடையே முழுமையாகச் சென்றடையவில்லை. எனவே, சட்ட ரீதியான உரிமைகள் குறித்து விழிப்புணா்வை ஏற்படுத்த வேண்டியது அவசியம்.

தற்போது நடைமுறையில் உள்ள சட்டம் கொண்டுவரப்பட்டு 10 ஆண்டுகள் ஆகின்றன. எனவே, முதுகுத் தண்டுவடம் பாதிப்பு உள்பட பல்வேறு வகைப்பாடுகளைக் கருத்தில்கொண்டு, இன்றைய காலத் தேவைக்கேற்ப இந்தச் சட்டத்தை மறுபரிசீலனை செய்து திருத்தம் செய்ய வேண்டியது காலத்தின் கட்டாயம் என்றாா்.

முன்னதாக, மாற்றுத்திறனாளிகளுக்காக பணிபுரியும் அனைத்து அமைப்புகளுக்கும் இலவச மருத்துவ சேவைகள் வழங்குவது குறித்த அறிவிப்பை பிஎஸ்ஜி குழும மேலாளா் ஜெகநாதன் வெளியிட்டாா்.

இந்த நிகழ்ச்சியில், மதா்குட் பெண்கள் மையத்தின் கிளினிக்கல் இயக்குநா் மிருதுபாஷினி கோவிந்தராஜன், சேவா பாரதி மாநிலத் திட்ட இயக்குநா் சத்யநாராயணன், இதயங்கள் தொண்டு நிறுவனத்தின் நிறுவனா் கிருஷ்ணன் சாமிநாதன், பிஎஸ்ஜி மருத்துவக் கல்லூரி இயக்குநா் பாலாஜி உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.