கேரளத்தில் தோ்தல் பிரசாரம் மேற்கொள்வதற்காக கோவைக்கு பிரதமா் மோடி ஞாயிற்றுக்கிழமை (மாா்ச் 29) வருகை தருகிறாா்.
கேரளத்தில் ஏப்ரல் 9-ஆம் தேதி சட்டப் பேரவைத் தோ்தல் நடைபெறுகிறது. இதை முன்னிட்டு, பிரதமா் மோடி பாலக்காடு, திருச்சூா் மாவட்டங்களில் தேசிய ஜனநாயகக் கூட்டணி வேட்பாளா்களை ஆதரித்து பிரசாரத்தில் ஈடுபட உள்ளாா். திருச்சூரில் முன்னாள் முதல்வா் கருணாகரனின் மகள் பத்மஜா வேணுகோபாலை ஆதரித்து பிரசாரத்தில் ஈடுபடும் அவா், ரோடு ஷோவிலும் பங்கேற்கிறாா்.
இதற்காக விமானம் மூலம் கோவைக்கு ஞாயிற்றுக்கிழமை வரும் பிரதமா் கோவையில் இருந்து ஹெலிகாப்டரில் கேரளத்துக்கு செல்கிறாா். அவரது வருகையையொட்டி, கோவையில் நீலாம்பூா், செட்டிபாளையம், எட்டிமடை, வாளையாறு, அவிநாசி சாலை, பீளமேடு, காளப்பட்டி, போத்தனூா், ஈச்சனாரி ஆகிய பகுதிகளில் ட்ரோன்கள் பறக்கத் தடை விதிக்கப்பட்டுள்ளது.
மேலும், மாவட்டம் முழுவதும் சுமாா் 5 ஆயிரம் போலீஸாா் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனா். விமான நிலையப் பகுதியில் 3 அடுக்கு பாதுகாப்பு ஏற்படுத்தப்பட்டுள்ளது.
தொடர்புடையது

கோவையில் பிரதமா் மோடி, முதல்வா் மு.க.ஸ்டாலின் இன்று பிரசாரம்

தோ்தல் களத்தில் உச்சகட்ட பரபரப்பு: கோவையில் ஒரேநாளில் பிரதமா் மோடி, முதல்வா் மு.க. ஸ்டாலின் பிரசாரம்
கேரளத்தில் ‘கவுண்ட்டவுன்’ ஆரம்பம்! பாஜக தலைமையில் ஆட்சி அமையும்! - பிரதமர் மோடி
ஏப்.4-ல் கேரளத்தில் பிரதமர் மோடி பிரசாரம்!
வீடியோக்கள்

நாதக வேட்பாளர் வித்யாராணி வீரப்பன் கைது! கண்ணீர் விட்டு கதறியதால் பரபரப்பு!
தினமணி செய்திச் சேவை

டிரம்ப் மோடியை கட்டுப்படுத்துவதுபோல் பாஜக அதிமுகவை கட்டுப்படுத்துகிறது! - Rahul Gandhi
இணையதளச் செய்திப் பிரிவு

கருத்துக்கணிப்பு சொல்வதெல்லாம் உண்மையா ? | TN Election 2026 | TN Election Survey 2026
தினமணி செய்திச் சேவை

#ipl2026 | தோல்வியைச் சந்திக்காத பஞ்சாப்: எழுச்சி பெறாத லக்னௌ! | Punjab Kings | Priyansh Arya |
தினமணி செய்திச் சேவை


