ராஜீவ் காந்தி நினைவிடத்தில் மரியாதை செலுத்திய டி.கே. சிவகுமார்!வங்கதேசத்தின் புதிய அதிபராக மிர்சா ஃபக்ரூல் ஆலம்கீர் தேர்வு!வங்கதேசத்தின் புதிய அதிபராக மிர்சா ஃபக்ரூல் ஆலம்கீர் தேர்வு! ஜார்க்கண்ட் தேர்வுகள் ரத்து உத்தரவு நிறுத்திவைப்பு! உயர் நீதிமன்றம்அமைச்சர் மரிய வில்சனுடன் சமரச பேச்சுக்கு விருப்பமில்லை! சகோதரர் தரப்பு திட்டவட்டம்!

கேரளத்தில் ‘கவுண்ட்டவுன்’ ஆரம்பம்! பாஜக தலைமையில் ஆட்சி அமையும்! - பிரதமர் மோடி

”ப்ரியப்பட்ட சகோதரி, சகோதரன்மாரே... எல்லாவருக்கும் என்றே நமஸ்காரம்!” என்று மலையாளத்தில் பிரதமர் மோடி பிரசாரம்...

Prime Minister Narendra Modi, centre, being felicitated during a public meeting ahead of the Kerala Assembly elections, in Thiruvalla, Kerala. (@NarendraModi/YT via PTI Photo)(PTI04_04_2026_000185B)

பிரதமர் மோடி கேரளத்தில் பிரசாரம் - PTI

Published On :4 ஏப்ரல் 2026, 6:27 pm IST

திருவல்லா : கேரளத்தில் பாஜக தலைமையில் ஆட்சி அமையும் என்று பிரதமர் நரேந்திர மோடி பேசினார். இன்றைய தேர்தல் பிரசாரத்தின்போது, அவர் கேரள மக்களுக்கு ஈஸ்டர் வாழ்த்துகளையும் அத்துடன் ஆண்டுப் பிறப்பையொட்டி விஷு வாழ்த்துகளையும் பகிர்ந்தார்.

அண்டை மாநிலமான கேரளத்தில் சட்டப்பேரவைத் தேர்தல் களம் சூடுபிடித்துள்ளது. அங்கு ஒரேகட்டமாக வரும் ஏப். 9-இல் வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. இதையொட்டி, கம்யூனிஸ்ட், காங்கிரஸ், பாஜக என அம்மாநில அரசியலில் கோலோச்சும் தேசிய கட்சிகள் தீவிரமாக களப் பிரசாரத்தில் ஈடுபட்டு வாக்காளர்களின் ஆதரவை தங்கள் அணிகளுக்குப் பெருக்கி வருகின்றன.

அந்த வகையில், திருவல்லா பகுதியில் இன்று (ஏப். 4) தேர்தல் பிரசார பொதுக்கூட்டத்தில் பேசிய பாஜக மூத்த தலைவரும் பிரதமருமான மோடி, “கேரளத்திலே என்றே ப்ரியப்பட்ட சகோதரி சகோதரன்மாரே... எல்லாவருக்கும் என்றே நமஸ்காரம்!” என்று மலையாளத்தில் தமது உரையைத் தொடங்கி காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய ஜனநாயக முன்னணியையும் (யூ.டி.எஃப்.) மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் தலைமையிலான இடதுசாரி ஜனநாயக முன்னணியையும் (எல்.டி.எஃப்.) விமர்சித்து பிரசாரத்தில் ஈடுபட்டார்.

அவர் பேசியதாவது : “எல்.டி.எஃப்., யூ.டி.எஃப். ஆகிய இரு கூட்டணிகளும் எஃப்.சி.ஆர்.ஏ., சிஏஏ, காஷ்மீர் ஃபைல்ஸ், கேரள ஸ்டோரி ஆகியவற்றைப் பற்றியெல்லாம் பொய் புரட்டுகளைப் பரப்புகின்றனர். அதுவே, அவர்களது பழக்கமாகிவிட்டது.

முன்னதாக, எல்.டி.எஃப்., யூ.டி.எஃப். சபரிமலை புனித தலத்தின் மகிமையைக் கெடுக்க சதி தீட்டினர். அவர்களது கொள்ளையடிக்கும் திட்டத்துக்கு இப்போதெல்லாம் கோயில் கருவறைகூட இலக்காகிவிட்டது. ஆனால், என்டிஏ அரசு அதிகாரத்துக்கு வந்தவுடன், சபரிமலையில் நடத்தப்பட்ட குற்றச்செயல்களுக்காக எல்.டி.எஃப்., யூ.டி.எஃப். தண்டிக்கப்படும்.

எல்.டி.எஃப்., யூ.டி.எஃப். ஆகிய இருமுனைகளுக்கும் எதிரான சண்டை ‘டபில்யூ.டபில்யூ.எஃப்.’ மல்யுத்தம் போன்றிருக்கிறது. அவர்கள் இருவருக்குமிடையே ரகசிய கூட்டணி அமைந்துள்ளது. ஒரே நாணயத்தின் இரு முகங்கள் அவர்களிருவரும். இதனால்தான், அவர்கள் பாஜகவை குறிவைத்து தாக்குகின்றனர். அவர்கள் இருவரும் ஒருவரையொருவர் மாறிமாறி ‘பாஜகவின் - பி டீம்’ என்று பிரசாரத்தில் ஈடுபடுகின்றனர். அவர்களுக்கே தெரியும், கேரளத்தில் ‘ஏ-டீம்’ பாஜகவே என்று.

வளைகுடா நாடுகளில் வாழும் இந்தியர்களின் பாதுகாப்புக்காக மத்திய அரசு அனைத்து உதவிகளையும் வழங்குவதை உறுதி செய்கிறது. தேர்தல்கள் வந்து செல்லும், அரசியலும் அப்படித்தான். ஆனால் என்னுடைய முதன்மை இலக்கு வளைகுடாவிலுள்ள என் சகோதர, சகோதரிகளின் பாதுகாப்பே.

எல்.டி.எஃப். அரசை அகற்றுவதற்கான கவுண்ட்டவுன் ஆரம்பமாகிவிட்டது. பாஜக தலைமையிலான என்டிஏ அரசு கேரளத்தில் ஆட்சிக்கு வரும்” என்றார்.

Summary

PM Modi extends greetings to people of Kerala for Easter, Vishu.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.