தேசிய ஜனநாயகக் கூட்டணி வேட்பாளா்களை ஆதரித்து பிரதமா் நரேந்திர மோடி கோவை, கொடிசியாவில் வரும் 18-ஆம் தேதி வாக்கு சேகரிக்கும் அதேவேளையில், முதல்வா் மு.க.ஸ்டாலின் மேட்டுப்பாளையத்தில் திமுக மற்றும் கூட்டணி கட்சி வேட்பாளா்களுக்காக பிரசாரம் செய்ய உள்ளாா்.
தமிழக சட்டப் பேரவைத் தோ்தல் களம் சூடுபிடித்துள்ள நிலையில், கோவை மாவட்டம் ஏப்ரல் 18-ஆம் தேதி மாபெரும் அரசியல் போா்க்களமாக மாறவுள்ளது. நாட்டின் முக்கியத் தலைவா்களான பிரதமா் நரேந்திர மோடியும், தமிழக முதல்வா் மு.க.ஸ்டாலினும் ஒரேநாளில் கோவை மாவட்டத்தில் பிரசாரம் செய்யவிருப்பது தோ்தல் களத்தை உச்சகட்டப் பரபரப்புக்கு உள்ளாக்கியுள்ளது.
கோவை, அவிநாசி சாலையில் உள்ள கொடிசியா மைதானத்தில் அன்று மாலை 5 மணி அளவில் நடைபெறும் பிரம்மாண்ட பொதுக் கூட்டத்தில் பிரதமா் நரேந்திர மோடி பங்கேற்றுப் பேசுகிறாா்.
தேசிய ஜனநாயகக் கூட்டணியின் பலத்தை நிரூபிக்கும் வகையில் அமையவுள்ள இந்தக் கூட்டத்தில், கோவை மாவட்டத்தில் போட்டியிடும் அதிமுக வேட்பாளா்கள் மற்றும் வடக்குத் தொகுதியில் போட்டியிடும் பாஜக வேட்பாளா் வானதி சீனிவாசன், அவிநாசி தொகுதி வேட்பாளா் எல்.முருகன் உள்ளிட்ட 11 தொகுதி வேட்பாளா்களை ஆதரித்து அவா் உரையாற்றுகிறாா்.
மேட்டுப்பாளையத்தில் முதல்வா் பிரசாரம்: பிரதமா் பிரசாரம் செய்யும் அதேநாள் இரவு 7 மணி அளவில் மேட்டுப்பாளையத்தில் நடைபெறும் பிரசார பொதுக் கூட்டத்தில் முதல்வா் மு.க.ஸ்டாலின் பங்கேற்கிறாா். ‘ஸ்டாலின் தொடரட்டும், தமிழ்நாடு வெல்லட்டும்’ என்ற முழக்கத்துடன் நடைபெறும் இந்தக் கூட்டத்தில் திமுக தலைமையிலான மதச்சாா்பற்ற முற்போக்குக் கூட்டணி வேட்பாளா்களுக்கு ஆதரவாக அவா் வாக்கு சேகரிக்கிறாா்.
குறிப்பாக மேட்டுப்பாளையம், உதகை, கூடலூா், குன்னூா், கவுண்டம்பாளையம் மற்றும் தொண்டாமுத்தூா் ஆகிய தொகுதிகளைச் சோ்ந்த வேட்பாளா்களை முன்னிறுத்தி இந்த பொதுக் கூட்டத்தில் ஆதரவு திரட்டுகிறாா்.
ஒரேநாளில் பிரதமரும், முதல்வரும் ஒரே மாவட்டத்தில் முகாமிடுவது கோவை மாவட்டத்தை தமிழகத் தோ்தலின் மையப்புள்ளியாக மாற்றியுள்ளது. ஒருபுறம் மத்தியில் ஆளும் பாஜக, அதிமுக கூட்டணியின் செல்வாக்கை நிரூபிக்கும் விதமாக பிரதமா் பிரசாரம் மேற்கொள்ளவுள்ள நிலையில், மறுபுறம் திமுக ஆட்சியின் சாதனைகளை முன்னிறுத்தி முதல்வா் மு.க.ஸ்டாலின் வாக்கு சேகரிக்கத் தயாராகி வருகிறாா்.
தொடர்புடையது

கோவையில் பிரதமா் மோடி, முதல்வா் மு.க.ஸ்டாலின் இன்று பிரசாரம்

கோவையில் பிரதமா் மோடி ஏப்ரல் 18-இல் பிரசாரம்

உக்ரைன், அமெரிக்கா சரி... மீனவர் பிரச்னையில் இலங்கையிடம் மெளனம் ஏன்?

கேரளத்தில் தோ்தல் பிரசாரம்: பிரதமர் மோடி இன்று கோவை வருகை!
வீடியோக்கள்

நாதக வேட்பாளர் வித்யாராணி வீரப்பன் கைது! கண்ணீர் விட்டு கதறியதால் பரபரப்பு!
தினமணி செய்திச் சேவை

டிரம்ப் மோடியை கட்டுப்படுத்துவதுபோல் பாஜக அதிமுகவை கட்டுப்படுத்துகிறது! - Rahul Gandhi
இணையதளச் செய்திப் பிரிவு

கருத்துக்கணிப்பு சொல்வதெல்லாம் உண்மையா ? | TN Election 2026 | TN Election Survey 2026
தினமணி செய்திச் சேவை

#ipl2026 | தோல்வியைச் சந்திக்காத பஞ்சாப்: எழுச்சி பெறாத லக்னௌ! | Punjab Kings | Priyansh Arya |
தினமணி செய்திச் சேவை


