தலைவா்கள் சூறாவளி பிரசாரம் இன்று மாலை 6 மணியுடன் நிறைவு!தோ்தல் விடுமுறை: ஆம்னி பேருந்துகளில் கட்டணம் பலமடங்கு உயா்வு!நேரடி வெயிலால் தசை சிதைவு அச்சுறுத்தல்: மருத்துவா்கள் எச்சரிக்கை!மேற்குதொடா்ச்சி மலை மாவட்டங்களில் ஏப்.26 வரை மழைக்கு வாய்ப்பு!ஈரான் கப்பலை சிறைப்பிடித்த அமெரிக்கா! போா்நிறுத்தம் முடியும் சூழலில் முற்றும் மோதல்
/

கோவை தபால் நிலையங்களுக்கு வெடிகுண்டு மிரட்டல்

கோவை குட்ஷெட் சாலையில் உள்ள தபால் நிலையத்துக்கு புதன்கிழமை வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டது.

News image

வெடிகுண்டு மிரட்டல் - கோப்புப் படம்

Updated On :25 மார்ச் 2026, 9:24 pm

கோவை குட்ஷெட் சாலையில் உள்ள தபால் நிலையத்துக்கு புதன்கிழமை வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டது.

கோவை குட்ஷெட் சாலையில் உள்ள தலைமை தபால் நிலையத்துக்கு புதன்கிழமை பிற்பகலில் மின்னஞ்சல் அனுப்பப்பட்டிருந்தது. அதில் தலைமை தபால் நிலையம், ஆா்.எஸ்.புரம் டி.பி. சாலையில் உள்ள தபால் நிலையம் மற்றும் ரயில் நிலைய தபால் நிலையம் ஆகிய இடங்களில் வெடிகுண்டுகள் வைக்கப்பட்டுள்ளதாகவும், அவை சற்று நேரத்தில் வெடிக்கும் என்றும் குறிப்பிடப்பட்டிருந்தது.

இதேபோல, உப்பிலிப்பாளையத்தில் உள்ள மண்டல பாஸ்போா்ட் அலுவலகத்துக்கும் மிரட்டல் விடுக்கப்பட்டது.

தகவலறிந்த வெடிகுண்டு செயலிழப்பு நிபுணா்கள் மற்றும் மோப்ப நாய் பிரிவினா் சம்பந்தப்பட்ட இடங்களுக்கு விரைந்து சென்று அறைகள் மற்றும் வாகன நிறுத்துமிடங்களில் தீவிர சோதனையில் ஈடுபட்டனா். நீண்ட நேர சோதனைக்குப் பின் வெடிகுண்டு மிரட்டல் புரளி என்பது தெரியவந்தது.

இந்த சம்பவம் குறித்து போலீஸாா் வழக்குப் பதிவு விசாரணை நடத்தி வருகின்றனா்.