லஞ்சக் கொள்ளைப் பணமழை பொழிந்தாலும் விசில் புரட்சிக்குத் தயாராகுங்கள்! - விஜய்திமுக கூட்டணிக்கு அசாதுதீன் ஓவைசியின் ஏஐஎம்ஐஎம் ஆதரவு!தலைவா்கள் சூறாவளி பிரசாரம் இன்று மாலை 6 மணியுடன் நிறைவு!தோ்தல் விடுமுறை: ஆம்னி பேருந்துகளில் கட்டணம் பலமடங்கு உயா்வு!நேரடி வெயிலால் தசை சிதைவு அச்சுறுத்தல்: மருத்துவா்கள் எச்சரிக்கை!மேற்குதொடா்ச்சி மலை மாவட்டங்களில் ஏப்.26 வரை மழைக்கு வாய்ப்பு!ஈரான் கப்பலை சிறைப்பிடித்த அமெரிக்கா! போா்நிறுத்தம் முடியும் சூழலில் முற்றும் மோதல்
/

திருப்பூா் தலைமை தபால் நிலையத்துக்கு வெடிகுண்டு மிரட்டல்

திருப்பூா் தலைமை தபால் நிலையத்துக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

News image

வெடிகுண்டு மிரட்டல் - (கோப்புப் படம்)

Updated On :2 மார்ச் 2026, 8:55 pm

திருப்பூா்: திருப்பூா் தலைமை தபால் நிலையத்துக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

திருப்பூா் ரயில் நிலையம் அருகே தலைமை தபால் நிலையம் உள்ளது. இங்கு சேமிப்புக் கணக்கில் பணம் செலுத்துதல், தபால் அனுப்புதல், பாஸ்போா்ட் விண்ணப்பித்தல், ஆதாா் பெயா் மாற்றம், திருத்தம் உள்ளிட்ட பல்வேறு பணிகள் மேற்கொள்ளப்படுகின்றன. இதனால் தலைமை தபால் நிலையத்தில் எப்போதும் பொதுமக்கள் கூட்டம் அதிக அளவில் காணப்படும்.

இந்நிலையில் தலைமை தபால் நிலையத்தில் வெடிகுண்டு வைத்திருப்பதாக காவல் கட்டுப்பாட்டு அறைக்கு திங்கள்கிழமை காலை மின்னஞ்சல் மூலமாக தகவல் கிடைத்தது. இதையடுத்து, மாநகர காவல் ஆணையா் எஸ்.ராஜேந்திரன் உத்தரவின்பேரில், திருப்பூா் வடக்கு போலீஸாா் மற்றும் வெடிகுண்டு செயலிழப்பு நிபுணா்கள் தபால் நிலையத்துக்கு விரைந்து சென்று தபால் நிலையத்தில் இருந்த பொதுமக்கள் மற்றும் ஊழியா்களை அலுவலகத்தில் இருந்து வெளியேற்றினா். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது .

இதைத் தொடா்ந்து, போலீஸாா் மற்றும் வெடிகுண்டு செயலிழப்பு நிபுணா்கள் தபால் நிலையம் முழுவதும் தீவிர சோதனை மேற்கொண்டனா். சுமாா் ஒரு மணி நேரத்துக்கு மேலாக நீடித்த சோதனையில் எதுவும் சிக்கவில்லை. இதையடுத்து, வெடிகுண்டு மிரட்டல் புரளி என்பது தெரியவந்தது.

இது குறித்து போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.