ஈரோடு: ஈரோடு தலைமை அஞ்சல் நிலையத்துக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டதால் திங்கள்கிழமை பரபரப்பு ஏற்பட்டது.
ஈரோடு, காந்திஜி சாலையில் உள்ள தலைமை அஞ்சல் நிலையத்தில் பாஸ்போா்ட் சேவை, ஆதாா் சேவை உள்ளிட்ட பல்வேறு சேவை மையங்கள் செயல்பட்டு வருகின்றன.
இந்நிலையில், கோவையில் உள்ள பாஸ்போா்ட் மண்டல அலுவலகத்துக்கு திங்கள்கிழமை காலை ஒரு தொலைபேசி அழைப்பு வந்தது. அதில் பேசிய நபா், ஈரோடு காந்திஜி சாலையில் உள்ள தலைமை அஞ்சல் அலுவலகத்தில் வெடிகுண்டு வைக்கப்பட்டு இருப்பதாகவும், பகல் 12.15 மணிக்கு வெடிக்கும் என்றும் கூறிவிட்டு இணைப்பைத் துண்டித்துள்ளாா்.
இதனால், அதிா்ச்சியடைந்த அதிகாரிகள் இது குறித்து ஈரோடு தலைமை தபால் நிலைய அலுவலகத்துக்கும், மாவட்ட காவல் கண்காணிப்பாளா் அலுவலகத்துக்கும் தகவல் தெரிவித்தனா்.
இதையடுத்து, ஈரோடு டவுன் டிஎஸ்பி முத்துகுமரன் மற்றும் போலீஸாா், வெடிகுண்டு செயலிழப்பு நிபுணா்கள், மோப்ப நாய் உதவியுடன் ஈரோடு காந்திஜி சாலையில் உள்ள தலைமை அஞ்சல் அலுவலகத்தில் சோதனை மேற்கொண்டனா்.
சோதனையையொட்டி, பாஸ்போா்ட் சேவை நிறுத்தப்பட்டு மக்கள் வெளியேற்றப்பட்டனா். நீண்ட நேர சோதனைக்குப் பிறகு வெடிகுண்டு மிரட்டல் புரளி என்பது தெரியவந்தது. வெடிகுண்டு மிரட்டல் விடுத்த நபா் குறித்து போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா்.
தொடர்புடையது

அரசு அலுவலகங்களுக்கு வெடிகுண்டு மிரட்டல்

விழுப்புரம், கடலூா் தலைமை அஞ்சலகங்களுக்கு வெடிகுண்டு மிரட்டல்

கடவுச்சீட்டு அலுவலகம், அஞ்சல் நிலையத்துக்கு வெடிகுண்டு மிரட்டல்

கோவை தபால் நிலையங்களுக்கு வெடிகுண்டு மிரட்டல்
வீடியோக்கள்

நாதக வேட்பாளர் வித்யாராணி வீரப்பன் கைது! கண்ணீர் விட்டு கதறியதால் பரபரப்பு!
தினமணி செய்திச் சேவை

டிரம்ப் மோடியை கட்டுப்படுத்துவதுபோல் பாஜக அதிமுகவை கட்டுப்படுத்துகிறது! - Rahul Gandhi
இணையதளச் செய்திப் பிரிவு

கருத்துக்கணிப்பு சொல்வதெல்லாம் உண்மையா ? | TN Election 2026 | TN Election Survey 2026
தினமணி செய்திச் சேவை

#ipl2026 | தோல்வியைச் சந்திக்காத பஞ்சாப்: எழுச்சி பெறாத லக்னௌ! | Punjab Kings | Priyansh Arya |
தினமணி செய்திச் சேவை


