கோவை வடக்குத் தொகுதி எம்எல்ஏ தொகுதி மேம்பாட்டு நிதியில் இருந்து கடந்த 5 ஆண்டுகளில் எண்ணற்ற பணிகளைச் செய்திருக்கிறேன். மருதமலை அடிவாரம், கல்வீரம்பாளையம், ஓணாப்பாளையம் சுற்றுவட்டார பகுதிகளில் தண்ணீர்த் தட்டுப்பாட்டை போக்குவதற்காக ரூ.38 லட்சத்தில் ஆழ்துளைக் கிணறு, நீர்மூழ்கி மோட்டார் அமைக்கப்பட்டுள்ளது.
பனைமரத்தூர் தொடக்கப் பள்ளி, சீரநாயக்கன்பாளையம் மேல்நிலைப் பள்ளிகளுக்கு அடிப்படை வசதிகள் ரூ. 55 லட்சத்தில் செய்து கொடுத்துள்ளேன். இதைத் தவிர, பூங்கா, அங்கன்வாடி, தார் சாலை, ஆரம்ப சுகாதார நிலையத்துக்கு மருத்துவ உபகரணங்கள் என வடவள்ளி, வீரகேரளம் பகுதிக்கு மட்டும் ரூ.3.26 கோடிக்கு பணிகள் செய்திருக்கிறேன்.
சாய்பாபா காலனி பகுதியில் அங்கன்வாடி மையம். நியாய விலைக் கடை என ரூ.1 கோடி மதிப்பிலான பணிகளும், கணபதி, பி.என் புதூர் பகுதிகளில் ரூ. 40 லட்சத்தில் சிறுவர் பூங்கா, நியாய விலைக் கடைகள் அமைக்கப்பட்டுள்ளன. மணியகாரன்பாளையம், கணபதி மாநகர் 3.ஆவது பிளாக் பகுதிகளில் ரூ. 50 லட்சத்தில் பூங்கா, சாய்பாபா காலனி கோயில்மேடு பகுதியில் ரூ. 25 லட்சத்தில் ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சி மையம், பாரதியார் பல்கலைக்கழக பகுதியில் மாணவ - மாணவிகளுக்காக ரூ. 30 லட்சத்தில் நிழற்குடை, 45ஆவது வார்டு அன்னை சத்யா நகரில் ரூ. 50 லட்சத்தில் பூங்கா என ஏராளமான பணிகளை செய்து முடித்திருக்கிறேன்.
- அம்மன் கே.அர்ச்சுணன், எம்எல்ஏ. கோவை வடக்குத் தொகுதி
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

அதிமுக ஆட்சிக்கு வந்தவுடன் ரூ.10 ஆயிரம்! கோவை வடக்கு வேட்பாளா் பிரசாரம்

முகையூா் வடக்கு ஒன்றியப் பகுதிகளில் திமுக வேட்பாளா் வாக்குசேகரிப்பு
கோவை வடக்கு: சொன்னாா்களே செய்தாா்களா?

சொன்னோம் செய்தோம்...
வீடியோக்கள்

#iranwar | போர் நிறுத்தம் நீட்டிப்பு: ஈரானிடம் டிரம்ப் கேட்பது என்ன? | Donald Trump |
தினமணி செய்திச் சேவை

#ipl2026 | போர்: பண்டியாவின் மும்பையா ருதுராஜின் சென்னையா? | MI vs CSK | MS Dhoni | Rohit Sharma |
தினமணி செய்திச் சேவை

வாக்குச்சாவடிகளை அடையாளம் காண புதிய முயற்சி | TN Election 2026 | Madurai | Polling booth
தினமணி செய்திச் சேவை

பணப்பட்டுவாடா புகார்களுக்கு எடுக்கப்பட்ட நடவடிக்கைகள்! அர்ச்சனா பட்நாயக் பேட்டி
இணையதளச் செய்திப் பிரிவு


