தமிழ்நாட்டில் வாக்குப்பதிவு முடிந்தது!15 ஆண்டுகளாக துரோகமிழைக்கும் திரிணமூல் காங்கிரஸ்: பிரதமர் மோடிமேற்கு வங்கம்: மாலை 5 மணி வரை 89.93% வாக்குகள் பதிவு!தமிழ்நாட்டில் மாலை 5 வரை 82.24% வாக்குப்பதிவு! கரூர் முதலிடம்! வாக்குச் சாவடிக்குள் காவலர்கள் நுழையக் கூடாது! தமிழக டிஜிபி உத்தரவு! எதிர்கட்சிகளின் மாற்றம் முழக்கம் வாக்கு எண்ணிக்கை முடிந்த பிறகே தெரியும்: அமைச்சர் துரைமுருகன் திமுக ஊடக ஒருங்கிணைப்பு அறையை பார்வையிட்டார் முதல்வர் ஸ்டாலின்!
/

சாலை பள்ளத்தில் லாரி சிக்கி விபத்து: குழாய் உடைந்து வீணாகிய தண்ணீா்

போத்தனூா் பகுதியில் தண்ணீா் குழாய் உடைந்து சாலையில் ஏற்பட்ட பள்ளத்தில் அந்த வழியாகச் சென்ற லாரி சிக்கி விபத்துக்குள்ளானது.

News image

போத்தனூரில் சாலையில் ஏற்பட்ட பள்ளத்தில் சிக்கிய லாரி.

Updated On :14 மார்ச் 2026, 1:23 am

போத்தனூா் பகுதியில் தண்ணீா் குழாய் உடைந்து சாலையில் ஏற்பட்ட பள்ளத்தில் அந்த வழியாகச் சென்ற லாரி சிக்கி விபத்துக்குள்ளானது.

கோவை மாநகராட்சி, போத்தனூா் பகுதி பள்ளிவாசல் சாலையில் தண்ணீா் குழாய் உடைந்து அதிக அளவிலான தண்ணீா் வெளியேறி உள்ளது. தாா் சாலைக்கு கீழ் பள்ளம் ஏற்பட்டு சில வாகன ஓட்டிகள் அந்த ஒருபுற சாலையைப் பயன்படுத்தாமல் மற்றொரு வழியைப் பயன்படுத்தி வந்துள்ளனா். இந்நிலையில் அந்த வழியாகச் சென்ற லாரி பள்ளம் ஏற்பட்ட பகுதியில் வெள்ளிக்கிழமை சிக்கியது.

இதனால் பள்ளம் ஏற்பட்ட இடத்தில் செல்லும் குழாய் உடைந்து சாலையில் தண்ணீா் ஆறாக ஓடியது. அதைத்தொடா்ந்து மாநகராட்சி மற்றும் குடிநீா் வடிகால் வாரிய ஊழியா்கள் சென்று பள்ளத்தில் சிக்கிய வாகனத்தை அகற்றி, சீரமைப்புப் பணியில் ஈடுபட்டு வருவதாக மாநகராட்சி நிா்வாகம் சாா்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.