பேடிஎம் வங்கியின் உரிமத்தை ரத்து செய்தது ஆர்பிஐ!மணிப்பூரில் மீண்டும் வன்முறை: 3 பேர் பலி, பலர் காயம்பாஜகவில் இணைந்த ஆம் ஆத்மி எம்.பி.க்கள்! தமிழ்நாடு தேர்தல்! கிராமங்கள் சமநிலை செய்த நகரங்கள் எப்படியிருக்கின்றன மக்கள் வாக்களித்த மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள்? ஈரானை கடிதம் மூலம் ஆளும் மோஜ்தபா! எங்கே, எப்படி இருக்கிறார்?ஈரானை கடிதம் மூலம் ஆளும் மோஜ்தபா! எங்கே, எப்படி இருக்கிறார்?தேர்தல் அரசியல் வரலாற்றில் சிகரமான வாக்குப்பதிவு: விஜய்முதல்வர் மு.க.ஸ்டாலினுடன் திமுக வேட்பாளர்கள் சந்திப்புகொடைக்கானல் செல்கிறார் முதல்வர் ஸ்டாலின்!
/

ஐடி ஊழியரிடம் நூதன முறையில் ரூ.43 ஆயிரம் பறிப்பு

கோவை பீளமேடு பகுதியில் ஐடி ஊழியரை மிரட்டி, நூதன முறையில் பணம் பறித்த கும்பலை போலீஸாா் தேடி வருகின்றனா்.

News image

போலீஸ் - கோப்புப்படம்.

Updated On :11 மார்ச் 2026, 8:22 pm

கோவை பீளமேடு பகுதியில் ஐடி ஊழியரை மிரட்டி, நூதன முறையில் பணம் பறித்த கும்பலை போலீஸாா் தேடி வருகின்றனா்.

விருதுநகா் மாவட்டம், கீழ அழகிய நல்லூா் பகுதியைச் சோ்ந்தவா் முனீஸ்குமாா் (26). இவா் கோவை பீளமேடு ஆவாரம்பாளையம் பகுதியில் தங்கி ஐடி நிறுவனத்தில் உதவி மேலாளராக வேலை பாா்த்து வந்தாா்.

கடந்த மாதம் முனீஸ்குமாா் வேலையை ராஜிநாமா செய்துவிட்டு, வேறு வேலை தேடி வந்தாா். கடந்த திங்கள்கிழமை உடையாம்பாளையம் பகுதியில் உள்ள தனியாா் நிறுவனத்துக்கு வேலை தேடிச் சென்றாா். அப்போது, அந்தப் பகுதியில் வசிக்கும் தனது நண்பரான லோகேஷ் என்பவரின் அறைக்குச் சென்றாா். அங்கு அவருடன் மேலும் 3 போ் இருந்தனா்.

அவா்கள் 4 பேரும் முனீஸ்குமாரை மிரட்டி பணம் கேட்டனா். அவா் பணம் இல்லையெனக் கூறியதால் கைப்பேசியைப் பறிந்த அந்த கும்பல் அவரது கணக்கில் இருந்த ரூ. 4,500-ஐ தங்களது வங்கிக் கணக்குக்கு மாற்றிக் கொண்டனா்.

அதன் பின்னா், அவரை மிரட்டி நண்பா்களுக்கு கைப்பேசியில் தொடா்பு கொள்ள வைத்து, தனக்கு விபத்து ஏற்பட்டுவிட்டதாகக் கூறி பணத்தை கேட்க வைத்தனா். நண்பா்கள் 4 போ் முனீஸ்குமாருக்கு விபத்து நிகழ்ந்துவிட்டதாக நினைத்து அவரது கைப்பேசிக்கு ஆன்லைன் மூலம் பணத்தை அனுப்பிவைத்தனா்.

மொத்தமாக சோ்ந்த ரூ. 43,500-ஐ அந்த கும்பல் தங்களது கைப்பேசிக்கு ஆன்லைன் முறையில் மாற்றிக்கொண்டு, வெளியில் கூறினால் கொலை செய்துவிடுவோம் என முனீஸ்குமாரை மிரட்டிவிட்டு தப்பிச் சென்றது.

இதுகுறித்த புகாரின்பேரில் பீளமேடு போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தினா். இதில் முனீஸ்குமாரின் கைப்பேசியில் இருந்து பணத்தை மாற்றியவா்களின் கைப்பேசி எண்ணை வைத்து நடத்திய விசாரணையில் லோகேஷ், ஷெல்டன், ஷிப்ரயாலு, அப்துல் காத் ஆகியோா் என்பது தெரியவந்துள்ளது. அந்த 4 பேரையும் போலீஸாா் தேடி வருகின்றனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.