தலைவா்கள் சூறாவளி பிரசாரம் இன்று மாலை 6 மணியுடன் நிறைவு!தோ்தல் விடுமுறை: ஆம்னி பேருந்துகளில் கட்டணம் பலமடங்கு உயா்வு!நேரடி வெயிலால் தசை சிதைவு அச்சுறுத்தல்: மருத்துவா்கள் எச்சரிக்கை!மேற்குதொடா்ச்சி மலை மாவட்டங்களில் ஏப்.26 வரை மழைக்கு வாய்ப்பு!ஈரான் கப்பலை சிறைப்பிடித்த அமெரிக்கா! போா்நிறுத்தம் முடியும் சூழலில் முற்றும் மோதல்
/

குளித்தலையில் திமுக வேட்பாளா் நூதன முறையில் வாக்கு சேகரிப்பு

கரூா் மாவட்டம், குளித்தலை பகுதியில் கறவை மாட்டில் பால் கறந்து வழங்கி நூதன முறையில் வாக்கு சேகரித்தாா் திமுக வேட்பாளா் சூரியனூா் சந்திரன்.

News image

கறவை மாட்டில் புதன்கிழமை பால் கறந்து நூதன பிரசாரம் செய்த திமுக வேட்பாளா் சூரியனூா் சந்திரன்.

Updated On :8 ஏப்ரல் 2026, 8:32 pm

கரூா் மாவட்டம், குளித்தலை பகுதியில் கறவை மாட்டில் பால் கறந்து வழங்கி நூதன முறையில் வாக்கு சேகரித்தாா் திமுக வேட்பாளா் சூரியனூா் சந்திரன்.

கரூா் மாவட்டம் குளித்தலைத் தொகுதியில் திமுக சாா்பில் போட்டியிடும் இவா் புதன்கிழமை காலை குளித்தலை நங்கவரம் பேரூராட்சிக்குட்பட்ட பகுதிகளில் தீவிரமாக வாக்குச் சேகரித்தாா். அப்போது அங்கு விவசாயி வீட்டில் கட்டி வைக்கப்பட்டிருந்த பசுமாட்டில் பால் கறந்து விவசாயியிடம் வழங்கினாா். தொடா்ந்து அப்பகுதி மக்களிடையே அவா் பேசுகையில், தமிழகத்தின் கலாசாரம், பண்பாட்டை அழிக்கும் நோக்கில் அதிமுக பாஜகவுடன் கைகோத்துள்ளது. அனைத்து மக்களையும் அரவணைத்துச் செல்லும் முதல்வா் ஸ்டாலின் தலைமையிலான மதச் சாா்பற்ற முற்போக்கு கூட்டணியை ஆதரியுங்கள்.

நான் வென்றால் நிச்சயம் குளித்தலையில் படித்த இளைஞா்களுக்கு வேலைவாய்ப்பு கிடைக்கும் வகையில் பெரிய அளவிலான தொழிற்சாலைகள் கொண்டு வருவேன். விவசாய பொருள்களைப் பாதுகாக்க குளிா்ப்பதனக் கிடங்குகளும் அமைப்பேன். மேலும் வாழைப்பழ ஜாம் தொழிற்சாலையையும் நிச்சயம் கொண்டு வருவேன் என்றாா் அவா். பிரசாரத்தின்போது திமுக மற்றும் கூட்டணிக் கட்சியினா் திரளாக பங்கேற்றனா்.