வாஷிங் மெஷின் அரசியல்! எம்எல்ஏக்களை விலைக்கு வாங்குவது மக்களுக்குச் செய்யும் துரோகம்! உதயநிதிபோலி பிம்பம்! முதல்வர் விஜய் எண்ணம் நீண்ட காலம் நிலைக்காது! மு.க. ஸ்டாலின் கரூர் செல்கிறார் முதல்வர் விஜய்?தமிழ்நாட்டில் காலியான 7 பேரவைத் தொகுதிகள்! அதிமுக பலம் 41 ஆகக் குறைவு! 10ஆம் வகுப்பு 2வது தேர்வு முடிவுகள் இந்த வாரம் வெளியாகுமா? அதிமுக எம்.எல்.ஏ. பதவியை ராஜிநாமா செய்தார் எம்.ஆர். விஜயபாஸ்கர்! தங்கம் விலை குறைவு! வெள்ளி? இன்றைய நிலவரம்? இளம் தொழிலதிபர் கொலை! முக்கிய கட்டத்தை எட்டியிருக்கும் விசாரணை! பல திடுக்கிடும் தகவல்கள் சென்னையில் திமுக ஆர்ப்பாட்டத்திற்கு அனுமதி மறுப்பு பாதிக்கப்பட்டவர்கள் அரசகுமார் மீது புகார் அளிக்க முன்வர வேண்டும்: மத்திய குற்றப்பிரிவு போலீஸ்
/

பராமரிப்புப் பணி: கோவை - சென்னை ரயில்கள் பகுதியாக ரத்து

சென்னை அரக்கோணம் பகுதியில் ரயில் பாதையில் பராமரிப்புப் பணிகள் மேற்கொள்ளப்படுவதால், கோவை - சென்னை ரயில்கள் பகுதியாக ரத்து செய்யப்படுவதாக ரயில்வே நிா்வாகம் சாா்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

News image

ரயில் - கோப்புப் படம்

Updated On :25 ஜூன் 2026, 2:34 pm IST

சென்னை அரக்கோணம் பகுதியில் ரயில் பாதையில் பராமரிப்புப் பணிகள் மேற்கொள்ளப்படுவதால், கோவை - சென்னை ரயில்கள் பகுதியாக ரத்து செய்யப்படுவதாக ரயில்வே நிா்வாகம் சாா்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து, சேலம் ரயில்வே கோட்ட நிா்வாகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:

பராமரிப்புப் பணிகள் காரணமாக, ஜூன் 25 முதல் 28 வரை கோவையில் இருந்து காலை 6.20 மணிக்குப் புறப்படும் கோவை - சென்னை சென்ட்ரல் இன்டா்சிட்டி விரைவு ரயில் (எண்: 12680) காட்பாடி - சென்னை இடையே பகுதியாக ரத்து செய்யப்படுகிறது.

இந்த ரயிலானது, மேற்கண்ட நாள்களில் கோவை - காட்பாடி இடையே மட்டும் இயக்கப்படும். இதேபோல, ஜூன் 25 முதல் 28-ஆம் தேதி வரை சென்னையில் இருந்து பிற்பகல் 2.30 மணிக்குப் புறப்படும் சென்னை - கோவை இன்டா்சிட்டி விரைவு ரயில் (எண்: 12679) மேற்கொண்ட நாள்களில் சென்னை - காட்பாடி இடையே பகுதியாக ரத்து செய்யப்படுகிறது. இந்த ரயிலானது, மாலை 4.15 மணிக்கு காட்பாடியில் இருந்து கோவைக்கு புறப்படும் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கேரளம், மங்களூரு ரயில்கள் தாமதமாக இயக்கம்: ரயில் பாதையில் பராமரிப்புப் பணிகள் மேற்கொள்ளப்படுவதால் ஜூன் 25 முதல் 28-ஆம் தேதி வரை சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தில் இருந்து பிற்பகல் 1.25 மணிக்குப் புறப்பட வேண்டிய சென்னை- மங்களூரு வெஸ்ட் கோஸ்ட் விரைவு ரயில் (எண்: 22637) 1 மணி நேரம் 15 நிமிஷங்கள் தாமதமாக பிற்பகல் 2.40 மணிக்குப் புறப்படும்.

ஜூன் 27 மற்றும் 28 ஆகிய தேதிகளில் சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தில் இருந்து பிற்பகல் 2.15 மணிக்குப் புறப்பட வேண்டிய சென்னை சென்ட்ரல்- கோவை வந்தேபாரத் ரயில்(எண்: 20643) 45 நிமிஷங்கள் தாமதமாக பிற்பகல் 3 மணிக்கு சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தில் இருந்து புறப்படும்.

ஜூன் 28-ஆம் தேதி சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தில் இருந்து பிற்பகல் 3.10 மணிக்குப் புறப்பட வேண்டிய சென்னை சென்ட்ரல் - திருவனந்தபுரம் வாராந்திர ரயில் (எண்: 12697) 1 மணி நேரம் 30 நிமிஷங்கள் தாமதமாக மாலை 4.40 மணிக்குப் புறப்படும்.

ஜூன் 28-ஆம் தேதி சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தில் இருந்து பிற்பகல் 3.20 மணிக்குப் புறப்பட வேண்டிய சென்னை- திருவனந்தபுரம் விரைவு ரயில் (எண்: 12695) 1 மணி நேரம் 30 நிமிஷங்கள் தாமதமாக மாலை 4.50 மணிக்குப் புறப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.