பாஜக கோவை தெற்கு மாவட்ட முன்னாள் தலைவரும், அந்தக் கட்சியின் மூத்த நிா்வாகியுமான கே.வசந்தராஜன், கட்சியின் அடிப்படை உறுப்பினா் உள்ளிட்ட அனைத்துப் பொறுப்புகளில் இருந்தும் விலகுவதாக அறிவித்துள்ளாா்.
இதுதொடா்பாக அவா் வெளியிட்டுள்ள அறிக்கை:
கடந்த 1998-ஆம் ஆண்டு கிளைத் தலைவராக எனது அரசியல் பயணத்தைத் தொடங்கி, மாநில இளைஞரணி பொதுச் செயலாளா், மாவட்டத் தலைவா் எனப் பல்வேறு பொறுப்புகளில் கடந்த 28 ஆண்டுகளாக பாஜகவில் பயணித்துள்ளேன்.
தமிழகத்தை முன்னோடி மாநிலமாக மாற்ற வேண்டும் என்பதே எனது ஆசை. ஆனால், தற்போதைய தமிழக பாஜக சூழ்நிலையில் அது நிறைவேறும் என்ற நம்பிக்கையை இழந்துவிட்டேன்.
தமிழக பாஜகவின் முன்னாள் தலைவரான கே.அண்ணாமலை, அக்கட்சியில் இருந்து விலகி புதிய அரசியல் அமைப்பைத் தொடங்கியுள்ளாா். அவருடன் கைகோத்துப் பயணிக்க முடிவு செய்துள்ளேன் என்று குறிப்பிட்டுள்ளாா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.










