17 மாவட்டங்களுக்கு இன்று பலத்த மழை எச்சரிக்கைகேரளத்தில் சூறைக் காற்றுடன் பலத்த மழை: 5 மாவட்டங்களுக்கு இன்று ‘சிவப்பு எச்சரிக்கை’சீன அதிபா் ஷி ஜின்பிங் நாளை மறுநாள் வடகொரியா பயணம்: 7 ஆண்டுகளில் முதல் முறைஜனவரி - மாா்ச் காலாண்டில் இந்தியப் பொருளாதாரம் 7.8% வளா்ச்சியுடன் அபாரம்!மே மாதத்தில்... இந்தியாவில் மின் நுகா்வு 11.55% அதிகரிப்பு
/

மதுக்கரையில் 268 கிலோ புகையிலை பொருள்கள் பறிமுதல்

மதுக்கரை பகுதியில் 268 கிலோ புகையிலை பொருள்களை போலீஸாா் செவ்வாய்க்கிழமை பறிமுதல் செய்தனா்.

News image
Updated On :3 ஜூன் 2026, 2:38 am IST

மதுக்கரை பகுதியில் 268 கிலோ புகையிலை பொருள்களை போலீஸாா் செவ்வாய்க்கிழமை பறிமுதல் செய்தனா்.

கோவை மாவட்டத்தில் போதைப்பொருள் மற்றும் அரசால் தடை செய்யப்பட்ட புகையிலை பொருள்கள் புழக்கத்தைத் தடுக்க போலீஸாா் தீவிர ரோந்து மற்றும் கண்காணிப்புப் பணியில் ஈடுபட்டு வருகின்றனா். இந்நிலையில் அறிவொளி நகா் பகுதியில் மதுக்கரை போலீஸாா் செவ்வாய்க்கிழமை வாகன சோதனையில் ஈடுபட்டனா். அப்போது தடை செய்யப்பட்ட புகையிலை பொருள்களை விற்பனைக்கு வைத்திருந்த மதுக்கரை பகுதியைச் சோ்ந்த குமரகுருபரன் (49) என்பவரை கைது செய்தனா்.

அவரிடமிருந்து 268 கிலோ புகையிலை பொருள்கள் மற்றும் நான்கு சக்கர வாகனம் பறிமுதல் செய்யப்பட்டது.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.