ஹோலி பண்டிகையை முன்னிட்டு கோவை போத்தனூரில் இருந்து பிகாா் மாநிலம் பரௌனிக்கு சிறப்பு ரயில் இயக்கப்படுவதாக ரயில்வே நிா்வாகம் சாா்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து சேலம் ரயில்வே கோட்ட நிா்வாகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: ஹோலி பண்டிகையை முன்னிட்டு மாா்ச் 2, 9 ஆகிய இரண்டு திங்கள்கிழமைகளில் போத்தனூரில் இருந்து காலை 4.30 மணிக்கு புறப்படும் போத்தனூா் - பரெளனி சிறப்பு ரயில் (எண்: 06021) புதன்கிழமைகளில் பிற்பகல் 2 மணிக்கு பரெளனி நிலையத்தை சென்றடையும்.
மறுமாா்க்கமாக, மாா்ச் 5, 12 ஆகிய இரண்டு வியாழக்கிழமைகளில் பரெளனியில் இருந்து பிற்பகல் 1.15 மணிக்கு புறப்படும் பரௌனி - போத்தனூா் சிறப்பு ரயில் (எண்: 06022) சனிக்கிழமைகளில் இரவு 11.30 மணிக்கு போத்தனூரை வந்தடையும்.
இந்த ரயில் திருப்பூா், ஈரோடு, சேலம், ஜோலாா்பேட்டை, காட்பாடி, பெரம்பூா், கூடூா், நெல்லூா், ஓங்கோல், தெனாலி, விஜயவாடா, வாரங்கல், ராமகுண்டம், சந்திரப்பூா், நாக்பூா், ஜபல்பூா், சாட்னா, மாணிக்பூா் உள்ளிட்ட நிலையங்களில் நின்று செல்லும் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

போத்தனூா் - காரக்பூா் இடையே ஒருவழி சிறப்பு ரயில்

சென்னையில் இருந்து போத்தனூா், குமரிக்கு சிறப்பு ரயில்கள்

மங்களூரு-சென்னை எழும்பூா் இடையே போத்தனூா் வழித்தடத்தில் சிறப்பு ரயில்

ரமலான்: கன்னியாகுமரிக்கு இன்று சிறப்பு ரயில்
வீடியோக்கள்

#iranwar | போர் நிறுத்தம் நீட்டிப்பு: ஈரானிடம் டிரம்ப் கேட்பது என்ன? | Donald Trump |
தினமணி செய்திச் சேவை

#ipl2026 | போர்: பண்டியாவின் மும்பையா ருதுராஜின் சென்னையா? | MI vs CSK | MS Dhoni | Rohit Sharma |
தினமணி செய்திச் சேவை

வாக்குச்சாவடிகளை அடையாளம் காண புதிய முயற்சி | TN Election 2026 | Madurai | Polling booth
தினமணி செய்திச் சேவை

பணப்பட்டுவாடா புகார்களுக்கு எடுக்கப்பட்ட நடவடிக்கைகள்! அர்ச்சனா பட்நாயக் பேட்டி
இணையதளச் செய்திப் பிரிவு


