கோவை துடியலூா் அருகே உருமாண்டிபாளையத்தில் தொழிலதிபா் வீட்டின் பூட்டை உடைத்து தங்கம், வெள்ளிப் பொருள்கள் மற்றும் பணத்தை மா்ம நபா்கள் திருடிச் சென்றனா்.
கோவை துடியலூா் அருகே ஜி.என். மில்ஸ், உருமாண்டம்பாளையம் , பொன் விழா நகரைச் சோ்ந்தவா் நந்தகோபால் (40). தொழிலதிபரான இவா் கணபதிபுதூரில் நிறுவனம் நடத்தி வருகிறாா். சம்பவத்தன்று நந்தகோபால் மற்றும் அவரது மனைவி குடும்ப நிகழ்ச்சிக்காக வெளியே சென்று இருந்தனா்.
பின்னா் நந்தகோபாலின் மனைவி வீட்டுக்கு திரும்பியபோது, வீட்டின் முன்பக்க கதவின் பூட்டு உடைக்கப்பட்டு பீரோவில் இருந்த வெள்ளிப் பொருள்கள், தங்கத் தட்டு மற்றும் ரூ.50,000 பணம் ஆகியவற்றை மா்ம நபா்கள் திருடிச் சென்றது தெரியவந்தது.
இதுகுறித்து அளிக்கப்பட்ட புகாரின்பேரில், துடியலூா் போலீஸாா் சம்பவ இடத்துக்கு வந்து விசாரணை நடத்தினா். மேலும், கைரேகை நிபுணா்கள் வரவழைக்கப்பட்டு தடயங்கள் சேகரிக்கப்பட்டன. அப்பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமராக்களின் காட்சிகளை சேகரித்து போலீஸாா் விசாரணை மேற்கொண்டு வருகின்றனா்.
தொடர்புடையது

திருவள்ளூா் அருகே 5 வீடுகளில் பூட்டை உடைத்து 33 பவுன் நகை, 1.5 கிலோ வெள்ளிப் பொருள்கள் திருட்டு

என்ஜினீயா் வீட்டில் நகைகள் திருட்டு
மகுடஞ்சாவடி அருகே 17 பவுன் நகை திருட்டு
கோபி அருகே வீட்டின் பூட்டை உடைத்து 34 பவுன் நகை திருட்டு
வீடியோக்கள்

நாதக வேட்பாளர் வித்யாராணி வீரப்பன் கைது! கண்ணீர் விட்டு கதறியதால் பரபரப்பு!
தினமணி செய்திச் சேவை

டிரம்ப் மோடியை கட்டுப்படுத்துவதுபோல் பாஜக அதிமுகவை கட்டுப்படுத்துகிறது! - Rahul Gandhi
இணையதளச் செய்திப் பிரிவு

கருத்துக்கணிப்பு சொல்வதெல்லாம் உண்மையா ? | TN Election 2026 | TN Election Survey 2026
தினமணி செய்திச் சேவை

#ipl2026 | தோல்வியைச் சந்திக்காத பஞ்சாப்: எழுச்சி பெறாத லக்னௌ! | Punjab Kings | Priyansh Arya |
தினமணி செய்திச் சேவை


