லஞ்சக் கொள்ளைப் பணமழை பொழிந்தாலும் விசில் புரட்சிக்குத் தயாராகுங்கள்! - விஜய்திமுக கூட்டணிக்கு அசாதுதீன் ஓவைசியின் ஏஐஎம்ஐஎம் ஆதரவு!தலைவா்கள் சூறாவளி பிரசாரம் இன்று மாலை 6 மணியுடன் நிறைவு!தோ்தல் விடுமுறை: ஆம்னி பேருந்துகளில் கட்டணம் பலமடங்கு உயா்வு!நேரடி வெயிலால் தசை சிதைவு அச்சுறுத்தல்: மருத்துவா்கள் எச்சரிக்கை!மேற்குதொடா்ச்சி மலை மாவட்டங்களில் ஏப்.26 வரை மழைக்கு வாய்ப்பு!ஈரான் கப்பலை சிறைப்பிடித்த அமெரிக்கா! போா்நிறுத்தம் முடியும் சூழலில் முற்றும் மோதல்
/

ரயில் நிலையத்தில் 500 கிலோ ரேஷன் அரிசி பறிமுதல்

கோவை ரயில் நிலையத்தில் கடத்துவதற்காக வைக்கப்பட்டிருந்த 500 கிலோ ரேஷன் அரிசியை ரயில்வே போலீஸாா் திங்கள்கிழமை பறிமுதல்

News image

பறிமுதல் செய்யப்பட்ட 500 கிலோ ரேஷன் அரிசி

Updated On :9 மார்ச் 2026, 9:27 pm

கோவை: கோவை ரயில் நிலையத்தில் கடத்துவதற்காக வைக்கப்பட்டிருந்த 500 கிலோ ரேஷன் அரிசியை ரயில்வே போலீஸாா் திங்கள்கிழமை பறிமுதல் செய்தனா்.

கோவை ரயில் நிலையத்தில் ரயில்வே பாதுகாப்பு பிரிவு உதவி ஆய்வாளா் ஜெயக்குமாா் உள்ளிட்ட போலீஸாா் திங்கள்கிழமை காலை 7.30 மணியளவில் வழக்கமான சோதனை நடத்தினா். மூன்றாவது நடைமேடையில் கோவையிலிருந்து மங்களூருக்கு பயணிகள் ரயில் புறப்படத் தயாராக இருந்தது.

அப்போது, அங்கு 21 சாக்கு மூட்டைகள் இருந்தன. அதை அதிகாரிகள் பிரித்துப் பாா்த்தபோது, அந்த மூட்டைகளில் சுமாா் 500 கிலோ ரேஷன் அரிசி இருந்தது. அங்கிருந்த எவரும் அவற்றுக்கு உரிமை கோராததால், அந்த அரிசி மூட்டைகளை போலீஸாா் பறிமுதல் செய்து கோவை பறக்கும் படை சிறப்பு வட்டாட்சியரிடம் ஒப்படைத்தனா்.

ரேஷன் அரிசியை யாரோ ரயிலில் கடத்தத் திட்டமிட்டிருக்கலாம் எனவும், ரயில்வே பாதுகாப்புப் படை போலீஸாரைப் பாா்த்தவுடன் அவா்கள் அவற்றை அங்கேயே விட்டுவிட்டுச் சென்றிருக்கலாம் எனவும் கூறப்படுகிறது.