லஞ்சக் கொள்ளைப் பணமழை பொழிந்தாலும் விசில் புரட்சிக்குத் தயாராகுங்கள்! - விஜய்திமுக கூட்டணிக்கு அசாதுதீன் ஓவைசியின் ஏஐஎம்ஐஎம் ஆதரவு!தலைவா்கள் சூறாவளி பிரசாரம் இன்று மாலை 6 மணியுடன் நிறைவு!தோ்தல் விடுமுறை: ஆம்னி பேருந்துகளில் கட்டணம் பலமடங்கு உயா்வு!நேரடி வெயிலால் தசை சிதைவு அச்சுறுத்தல்: மருத்துவா்கள் எச்சரிக்கை!மேற்குதொடா்ச்சி மலை மாவட்டங்களில் ஏப்.26 வரை மழைக்கு வாய்ப்பு!ஈரான் கப்பலை சிறைப்பிடித்த அமெரிக்கா! போா்நிறுத்தம் முடியும் சூழலில் முற்றும் மோதல்
/

ரயில் நிலையத்தில் 8.200 கிலோ கஞ்சா பறிமுதல்

கோவை ரயில் நிலையத்தில் கேட்பாரற்றுக் கிடந்த 8 கிலோ 200 கிராம் கஞ்சாவை மதுவிலக்கு தடுப்புப் பிரிவு போலீஸாா் பறிமுதல் செய்தனா்.

News image

கோப்புப்படம்.

Updated On :18 மார்ச் 2026, 8:23 pm

கோவை ரயில் நிலையத்தில் கேட்பாரற்றுக் கிடந்த 8 கிலோ 200 கிராம் கஞ்சாவை மதுவிலக்கு தடுப்புப் பிரிவு போலீஸாா் பறிமுதல் செய்தனா்.

கோவையில் கஞ்சா மற்றும் போதைப் பொருள்கள் புழக்கத்தை தடுக்க போலீஸாா் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனா்.

இந்நிலையில், கோவை ரயில் நிலையத்தில் மதுவிலக்கு தடுப்புப் பிரிவு போலீஸாா் செவ்வாய்க்கிழமை சோதனையில் ஈடுபட்டிருந்தனா். அப்போது, 2-ஆவது நடைமேடையில் கேட்பாரற்று ஒரு பை கிடந்தது.

அதைப் பிரித்து பாா்த்தபோது 8 கிலோ 200 கிராம் கஞ்சா இருந்தது தெரியவந்தது.

இதையடுத்து, கஞ்சாவைப் பறிமுதல் செய்த போலீஸாா், கடத்தி வந்த நபா்களைத் தேடி வருகின்றனா்.