யு-18 ஆசிய கோப்பை ஹாக்கி: இந்தியா சாம்பியன் நார்வே செஸ் பட்டம் வென்ற பிரக்ஞானந்தாவுக்கு பிரதமர் மோடி, அமித் ஷா வாழ்த்துகுவைத், பஹ்ரைனில் ஈரான் தாக்குதல் - கத்தார், எகிப்து கண்டனம்போர்நிறுத்தம் மீறல்! இஸ்ரேலின் தாக்குதலில் லெபனானில் ராணுவ அதிகாரிகள் உள்பட 9 பேர் பலி!தில்லியில் கரப்பான்பூச்சி மக்கள் கட்சியின் மாபெரும் போராட்டம்! சோனம் வாங்சுக் பங்கேற்பு!பேச்சுவார்த்தைக்கு மறுப்பு! ரஷியாவின் பீட்டர்ஸ்பர்க் நகரைத் தாக்கிய உக்ரைன்!ஹார்ட் டிஸ்க் திருட்டு விவகாரம்: முதல்வர் தினமும் கண்காணித்து வருகிறார்! நிர்மல்குமார்திமுக கூட்டணியில்தான் இருக்கிறோம்! ப. சிதம்பரம் சந்திப்புக்குப்பின் மு. வீரபாண்டியன் பேட்டி
/

குடியாத்தம் கெங்கையம்மன் கோவில் சிரசுத் திருவிழா!

குடியாத்தம் கெங்கையம்மன் கோவில் சிரசுத் திருவிழா பற்றி...

News image

கெங்கையம்மன் கோவில் சிரசுத் திருவிழா - Dinamani

Updated On :15 மே 2026, 10:29 am IST

குடியாத்தம் கெங்கையம்மன் கோவில் சிரசுத் திருவிழா வெகு விமர்சையாக நடைபெற்று வருகிறது.

வேலூர் மாவட்டம், குடியாத்தம் கோபாலபுரம் பகுதியில் உள்ள கெளடண்யா மகாநதி ஆற்றங்கரையோரம் பழமைவாய்ந்த பிரசித்திபெற்ற ஸ்ரீ கெங்கை அம்மன் கோவிலில் ஆண்டுதோறும் வைகாசி மாதம் 1-ம் தேதி கெங்கையம்மன் சிரசு திருவிழா நடைபெறுவது வழக்கம்.

இந்த நிலையில், வைகாசி 1 ஆம் தேதியான இன்று கெங்கையம்மன் சிரசு திருவிழா வெகு விமர்சையாக தற்போது நடைபெற்று வருகிறது.

முன்னதாக மே 1-ம் தேதி காப்பு கட்டுதலுடன் தொடங்கிய இந்த திருவிழா, தற்போது தரணம் பேட்டையில் உள்ள முத்தாலம்மன் கோவிலில் இருந்து அம்மன் சிரசு சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டு, குடியாத்தம் நகரின் முக்கிய சாலைகளின் வழியாக மேளதாளங்களுடன் ஊர் மக்கள் எடுத்து வந்தனர்.

இந்த சிரசு திருவிழாவைக் காண வேலூர், திருப்பத்தூர், ராணிப்பேட்டை ஆகிய மாவட்டங்களில் இருந்தும், ஆந்திரம், கர்நாடகம் மாநிலங்களில் இருந்தும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் வந்துள்ளனர்.

வேண்டுதலை நிறைவேற்றும் வகையில், தெருவெங்கும் தேங்காய் உடைத்து கற்பூரம் ஏற்றி தங்களுடைய நேர்த்திக் கடனை செலுத்தி வருகின்றனர்.

ஆயிரக்கணக்கான பக்தர்கள் கூடியிருக்கும் நிலையில், கூட்டத்தில் எந்தவிதமான அசம்பாவிதம் ஏற்படாமல் தடுப்பதற்காக வேலூர் மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் சிவராமன் தலைமையில் வேலூர், திருப்பத்தூர், ராணிப்பேட்டை, திருவண்ணாமலை ஆகிய மாவட்டங்களில் இருந்து 1,300 காவல்துறையினர் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

Summary

Gengaiamman Temple Head Festival in Gudiyatham!

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.