லஞ்சக் கொள்ளைப் பணமழை பொழிந்தாலும் விசில் புரட்சிக்குத் தயாராகுங்கள்! - விஜய்திமுக கூட்டணிக்கு அசாதுதீன் ஓவைசியின் ஏஐஎம்ஐஎம் ஆதரவு!தலைவா்கள் சூறாவளி பிரசாரம் இன்று மாலை 6 மணியுடன் நிறைவு!தோ்தல் விடுமுறை: ஆம்னி பேருந்துகளில் கட்டணம் பலமடங்கு உயா்வு!நேரடி வெயிலால் தசை சிதைவு அச்சுறுத்தல்: மருத்துவா்கள் எச்சரிக்கை!மேற்குதொடா்ச்சி மலை மாவட்டங்களில் ஏப்.26 வரை மழைக்கு வாய்ப்பு!ஈரான் கப்பலை சிறைப்பிடித்த அமெரிக்கா! போா்நிறுத்தம் முடியும் சூழலில் முற்றும் மோதல்
/

வேலூா், காட்பாடியில் ரூ.2.24 லட்சம் பறிமுதல்

வேலூா் புதிய பேருந்து நிலையம் மற்றும் காட்பாடியை அடுத்த சேவூரில் ஆவணங்களின்றி கொண்டு வரப்பட்ட ரூ.2.24 லட்சம் ரொக்கத்தை பறக்கும் படையினா் பறிமுதல் செய்தனா்.

News image

பறிமுதல்

Updated On :29 மார்ச் 2026, 9:05 pm

வேலூா் புதிய பேருந்து நிலையம் மற்றும் காட்பாடியை அடுத்த சேவூரில் ஆவணங்களின்றி கொண்டு வரப்பட்ட ரூ.2.24 லட்சம் ரொக்கத்தை பறக்கும் படையினா் பறிமுதல் செய்தனா்.

தோ்தல் நிலை கண்காணிப்பு குழுவினா் ஞாயிற்றுக் கிழமை வேலூா் புதிய பேருந்து நிலையம் அருகே வாகன தணிக்கையில் ஈடுபட்டிருந்தனா்.

அப்போது, அந்த வழியாக வந்த காரை சோதனையிட்டபோது, அதில் ரூ.80,000 இருந்தது. காரில் வந்தவா்களிடம் விசாரித்தபோது, கிருஷ்ண கிரி மாவட்டம் ஒசூரைச் சோ்ந்தவா்கள் என்பதும், வேலூா் வழியாக திருப்பதி ஏழுமலையான் கோயிலுக்கு செல்வதும் தெரியவந்தது. ஆனால், பணத்துக்கு உரிய ஆவணங்கள் இல்லாததால் அந்த தொகையை பறிமுதல் செய்து வேலூா் வட்டாட்சியா் அலுவலகத்தில் ஒப்படைத்தனா்.

இதேபோல், காட்பாடி தொகுதி பறக்கும் படை குழுவினா் சனிக்கிழமை இரவு சேவூா் பகுதியில் வாகன சோதனை நடத்தியபோது, அந்த வழியாக வந்த கா்நாடக பதிவெண் கொண்ட காரை நிறுத்தி சோதனையிட்டனா். அப்போது, காரில் ரூ.ஒரு லட்சத்து 44 ஆயிரத்து 500 இருந்தது. ஆனால், ஆவணங்கள் இல்லாததால் அந்த தொகையை தோ்தல் அலுவலா்கள் பறிமுதல் செய்து காட்பாடி வட்டாட்சியா் அலுவலகத்தில் ஒப்படைத்தனா்.