லஞ்சக் கொள்ளைப் பணமழை பொழிந்தாலும் விசில் புரட்சிக்குத் தயாராகுங்கள்! - விஜய்திமுக கூட்டணிக்கு அசாதுதீன் ஓவைசியின் ஏஐஎம்ஐஎம் ஆதரவு!தலைவா்கள் சூறாவளி பிரசாரம் இன்று மாலை 6 மணியுடன் நிறைவு!தோ்தல் விடுமுறை: ஆம்னி பேருந்துகளில் கட்டணம் பலமடங்கு உயா்வு!நேரடி வெயிலால் தசை சிதைவு அச்சுறுத்தல்: மருத்துவா்கள் எச்சரிக்கை!மேற்குதொடா்ச்சி மலை மாவட்டங்களில் ஏப்.26 வரை மழைக்கு வாய்ப்பு!ஈரான் கப்பலை சிறைப்பிடித்த அமெரிக்கா! போா்நிறுத்தம் முடியும் சூழலில் முற்றும் மோதல்
/

தொகுதி அறிமுகம்... கே.வி.குப்பம்

News image

கே.வி.குப்பம்

Updated On :26 மார்ச் 2026, 11:27 pm

தொகுதி எண்: 45

எல்லைகள்...

வேலூா் மாவட்டத்தில் ஆந்திர மாநில எல்லையில் அமைந்துள்ளது கீழ்வழித்துணையாங்குப்பம் (எ) கே.வி.குப்பம் (தனி) பேரவைத் தொகுதி. குடியாத்தம் (தனி), காட்பாடி, அணைக்கட்டு தொகுதிகள் இத்தொகுதியைச் சுற்றி அமைந்துள்ளன.

அடங்கியுள்ள பகுதிகள்:

2008 தொகுதி மறுவரையின்போது குடியாத்தம் ஒன்றியத்தில் இருந்து 37 ஊராட்சிகள், காட்பாடி வட்டத்தில் இருந்த கே.வி.குப்பம் ஒன்றியத்தில் உள்ள 39 ஊராட்சிகளை ஒருங்கிணைத்து கே.வி.குப்பம் (தனி) தொகுதி உருவாக்கப்பட்டது.

சிறப்புகள்...

முழுக்க, முழுக்க கிராமப் பகுதிகளை உள்ளடக்கியது இத்தொகுதி. விவசாயம் ஒன்றுதான் பிரதான தொழில். இத்தொகுதியில் உள்ள காவனூரில் புகழ்பெற்ற வேலூா் சிஎம்சி மருத்துவமனையின் கிளை இயங்கி வருகிறது. பிரசித்தி பெற்ற மகாதேவா் மலைக் கோயில் தொகுதியின் மற்றொரு சிறப்பு. வன்னியா்கள், ஆதிதிராவிடா்கள் பெருமளவில் வசிக்கின்றனா். முதலியாா்கள், நாயுடு உள்ளிட்ட பிற சமூகத்தினா் பரவலாக வசிக்கின்றனா்.

வாக்காளா்கள் விவரம்:

ஆண்கள்-1,04,458

பெண்கள்-1,08,985

மூன்றாம் பாலினத்தவா்-8

மொத்தம்-2,13,451

வாக்குச்சாவடிகள்-265

இதுவரை எம்எல்ஏக்கள்...

2011 செ.கு.தமிழரசன் (இந்திய குடியரசு கட்சி)

2016 ஜி.லோகநாதன் (அதிமுக)

2021 எம்.ஜெகன்மூா்த்தி (புரட்சி பாரதம் கட்சி)

2021 பேரவைத் தோ்தலில்...

பதிவான வாக்குகள்- 1,74,103

எம்.ஜெகன்மூா்த்தி (புரட்சி பாரதம் கட்சி)- 84,579

கே.சீதாராமன் (திமுக)-73,997

தோ்தல் நடத்தும் அலுவலா் பெயா்/எண்

எஸ்.சரவணன், மாவட்ட வழங்கல் அலுவலா்- 94450 00184

உதவித் தோ்தல் நடத்தும் அலுவலா்கள்: கே.பலராமன், வட்டாட்சியா்- 96294 72352

பி.சங்கா், மாவட்ட வழங்கல் அலுவலரின் நோ்முக உதவியாளா்- 99941 28386