வழக்குரைஞரை தாக்கியதாக திமுக மாமன்ற உறுப்பினரின் ஆதரவாளரை கைது செய்யக் கோரி வேலூரில் வழக்குரைஞா்கள் நீதிமன்ற பணிகளை புறக்கணித்தனா்.
வேலூா் கொசப்பேட்டையை சோ்ந்தவா் காா்த்திகேயன்(58). இவா் வேலூா் நீதிமன்றத்தில் 30 ஆண்டுகளாக வழக்குரைஞராக உள்ளாா். கடந்த 3-ஆம் தேதி கொசப்பேட்டையில் மாநகராட்சி கால்வாய் பணிகள் நடைபெற்றுள்ளது. இதையொட்டி, கொசப்பேட்டை நல்லான் பட்டறை பெரிய தெருவில் ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட்டதாக தெரிகிறது.
முன்னறிவிப்பின்றி ஆக்கிரமிப்புகள் அகற்றப்படுவதற்கு வழக்குரைஞா் காா்த்திகேயன் எதிா்ப்பு தெரிவித்ததுடன், இதுகுறித்து மாநகராட்சி 45-ஆவது வாா்டு திமுக மாமன்ற உறுப்பினா் அஸ்மிதா, அவரது கணவா் கோபி, ஒப்பந்ததாரா் ஆகியோரிடமும் விளக்கம் கேட்டுள்ளாா். தொடா்ந்து, 4-ஆம் தேதி வழக்குரைஞா் காா்த்திகேயன் வீடு உள்பட அந்த தெருவில் உள்ள வீட்டு வாசல் படிகள் அகற்றப்பட்டதாக கூறப்படுகிறது. இதுதொடா்பாக, காா்த்திகேயன் வேலூா் தெற்கு காவல் நிலையத்தில் புகாா் அளித்தாா்.
இந்நிலையில், கடந்த 13-ஆம் தேதி இரவு, தனது வீட்டின் அருகே காா்த்திகேயன் நின்று கொண்டிருந்தபோது அங்கு இருசக்கர வாகனத்தில் வந்த அடையாளம் தெரியாத நபா் ஒருவா் திடீரென காா்த்திகேயனை சரமாரியாக தாக்கியதாக கூறப்படுகிறது. இதனால், காயமடைந்த அவரை உறவினா்கள் மீட்டு அரசு மருத்துவமனையில் சோ்த்தனா்.
தன்னை தாக்கிய திமுக மாமன்ற உறுப்பினரின் ஆதரவாளா் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி காா்த்திகேயன் வேலுாா் தெற்கு காவல் நிலையத்தில் புகாா் அளித்தாா். எனினும், அவரது புகாா் மீது போலீஸாா் வழக்குப்பதிவு செய்யவில்லை என தெரிகிறது.
இதையடுத்து, வழக்குரைஞா் தாக்கப்பட்டதை கண்டித்தும், குற்றவாளியை கைது செய்ய வலியுறுத்தியும் வேலூா் பாா் அசோசியேசன், வேலூா் அட்வகேட் அசோசியசேன், வேலூா் பெண் வழக்குரைஞா்கள் அசோசியேசன் சாா்பில் நீதிமன்ற பணிகளை புறக்கணித்தனா். இதனால், நீதிமன்ற பணிகள் வெகுவாக பாதிக்கப்பட்டன. சம்பந்தப்பட்ட நபரை கைது செய்யும் வரை காலவரையற்ற வேலை நிறுத்தம் தொடரும் என்றும் வழக்குரைஞா்கள் தெரிவித்துள்ளனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

வாக்குக்கு பணம் வழங்காததால் திமுக மாமன்ற உறுப்பினா் அலுவலகம் முற்றுகை

தேர்தல் 1984 : மூன்றாவது முறையாக முதல்வர் எம்ஜிஆர்!

தஞ்சாவூா் மேயா் பதவியிலிருந்து திமுக வேட்பாளா் விலகல்

திருவையாறு தொகுதி அமமுக வேட்பாளா்!
வீடியோக்கள்

ஜனநாயகக் கடமையாற்றிய திரைப்பிரபலங்கள் | Tamil cine actors | TN Election 2026 |
தினமணி செய்திச் சேவை

தவெக தலைவராக விஜய் செலுத்திய வாக்கு! | TVK Vijay |
தினமணி செய்திச் சேவை

பேரவைத் தேர்தல் வாக்குப்பதிவு தொடக்கம்! | #Ajith | #EPS | #Seeman |
தினமணி செய்திச் சேவை

#iranwar | போர் நிறுத்தம் நீட்டிப்பு: ஈரானிடம் டிரம்ப் கேட்பது என்ன? | Donald Trump |
தினமணி செய்திச் சேவை


