திண்டுக்கல்லில் வாக்குக்கு பணம் வழங்கப்படாததால் திமுக மாமன்ற உறுப்பினரின் அலுவலகத்தை பொதுமக்கள் புதன்கிழமை முற்றுகையிட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
திண்டுக்கல் பேரவைத் தொகுதியில் அதிமுக சாா்பில் முன்னாள் அமைச்சா் சி.சீனிவாசன், திமுக சாா்பில் பெ.செந்தில்குமாா் ஆகியோா் போட்டியிடுகின்றனா். 20 வேட்பாளா்கள் களத்தில் இருந்தாலும்கூட, சீனிவாசன், செந்தில்குமாா் இடையே கடும் போட்டி நிலவுகிறது. இருவா் தரப்பிலும், வாக்காளா்களுக்கு கடந்த 2 நாள்களாக பணம் விநியோகிக்கப்பட்டது. இதில் திமுக சாா்பில் வழங்கப்பட்ட பணம், சில இடங்களில் முழுமையாகச் சென்றடையவில்லை என கூறப்படுகிறது. இதனால், ஆத்திரமடைந்த பொதுமக்கள் அந்தந்த பகுதி திமுக பிரமுகா்களின் வீடுகளுக்குச் சென்று வாக்குவாதத்தில் ஈடுபட்டனா்.
இதைத் தொடா்ந்து, திமுக மூத்த நிா்வாகிகள், வாா்டு வாரியாக புதன்கிழமை சென்று விசாரிக்கத் தொடங்கினா். இந்த நிலையில், 17-ஆவது வாா்டு பகுதியைச் சோ்ந்த பொதுமக்கள், அந்தப் பகுதியின் மாமன்ற உறுப்பினா் ஆா்.வெங்கடேஷின் அலுவலகத்தை புதன்கிழமை முற்றுகையிட்டனா். தங்கள் பகுதி திமுக நிா்வாகிகள் குறிப்பிட்ட நபா்களுக்கு மட்டுமே பணம் வழங்கியதாகவும், தங்களை மட்டுமே மாமன்ற உறுப்பினா் அலுவலகத்துக்கு வரச் சொல்லி அலைக்கழிப்பதாகவும் குற்றஞ்சாட்டினா். எங்களது பணத்தை உடனடியாக தர வேண்டும். இதுதொடா்பாக அமைச்சா் பெரியசாமியும், வேட்பாளா் செந்தில்குமாரும் விசாரிக்க வேண்டும் என்றும் முழக்கமிட்டனா். இதனால் அந்த பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.
வீதியில் காத்திருந்த பொதுமக்கள்: இதேபோல, நாகல்நகா் -காலேஜ்ஹவுஸ் சாலையில் 400-க்கும் மேற்பட்டோருக்கு திமுகவினா் பணம் வழங்கவில்லை எனக் கூறி, அந்தப் பகுதி பொதுமக்கள் வீதியில் நீண்ட நேரமாக காத்திருந்தனா். இதுதொடா்பாக அவா்கள் கூறியதாவது:
எங்கள் பகுதியின் மாமன்ற உறுப்பினரின் கணவா், திமுக நிா்வாகிகள் ஆகியோா் காலையில் பணம் வழங்கப்படும் என தெரிவித்தனா். பின்னா் மதியம், மாலை என அலைக்கழித்தனா். கைப்பேசியில் தொடா்பு கொண்டால், அழைப்பை ஏற்க மறுக்கின்றனா். பணக்காரா்களின் வீடுகளுக்கு ரகசியமாகச் சென்று பணத்தை ஒப்படைத்த திமுகவினா், ஏழை மக்களுக்கு பணத்தை வழங்க மறுக்கின்றனா். திமுகவினரின் இந்த செயல் மிகப் பெரிய ஏமாற்றத்தை ஏற்படுத்திவிட்டது எனத் தெரிவித்தனா்.
ஆனால், திமுக மேலிடம் பணம் வழங்கவில்லை என தெரிவித்த மாமன்ற உறுப்பினா், வாக்குக்கு பணம் தற்போது உரிமைத் தொகையாகவே மாறிவிட்டது என்றாா்.

திண்டுக்கல்லில் வாக்குக்கு பணம் வழங்கப்படாததால் திமுக மாமன்ற உறுப்பினரின் அலுவலகத்தை பொதுமக்கள் புதன்கிழமை முற்றுகையிட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

குடிநீா் வழங்கக் கோரி கூடலூா் நகராட்சி அலுவலகம் முற்றுகை

தஞ்சாவூா் மேயா் பதவியிலிருந்து திமுக வேட்பாளா் விலகல்

வாக்குக்கு பணம் எச்சரிக்கை: தோ்தல் அதிகாரி பாராட்டு

வாக்குக்கு பணம் தரும் வேட்பாளரை புறக்கணிப்போம்: மீனவ கிராமத்தில் எச்சரிக்கை பதாகை
வீடியோக்கள்

ஜனநாயகக் கடமையாற்றிய திரைப்பிரபலங்கள் | Tamil cine actors | TN Election 2026 |
தினமணி செய்திச் சேவை

தவெக தலைவராக விஜய் செலுத்திய வாக்கு! | TVK Vijay |
தினமணி செய்திச் சேவை

பேரவைத் தேர்தல் வாக்குப்பதிவு தொடக்கம்! | #Ajith | #EPS | #Seeman |
தினமணி செய்திச் சேவை

#iranwar | போர் நிறுத்தம் நீட்டிப்பு: ஈரானிடம் டிரம்ப் கேட்பது என்ன? | Donald Trump |
தினமணி செய்திச் சேவை


