மீண்டும் மனிதப் பிறவி எடுத்தால் உங்கள் குடும்பத்தில் ஒருவராக பிறக்க வேண்டும்: எடப்பாடி பிரசாரத்தில் இபிஎஸ் பேச்சுஅதிமுக ஆட்சி அமைந்ததும் 3 மாதங்களில் போதைப்பொருள் ஒழிக்கப்படும் : இபிஎஸ் வாக்குறுதி விவசாயிகளை வஞ்சிக்கும் திமுகவுக்கு மக்கள் தகுந்த பாடத்தைப் புகட்ட வேண்டும் : எடப்பாடி பழனிசாமி மகளிர் இடஒதுக்கீடு மசோதாவை தோல்வி அடையச் செய்ததற்கு எதிர்ப்பு தெரிவித்து பாஜகவினர் போராட்டம்பாஜகவுடன் கூட்டணி: நிதீஷ்குமாரின் நிலைதான் எடப்பாடி பழனிசாமிக்கு - அரவிந்த் கேஜரிவால்பஹல்காம் தாக்குதல்! காயங்கள் ஆறவில்லை - குடும்பங்கள் கண்ணீர்!வரலாற்றுச் சிறப்புமிக்க அதிமுக இறந்துவிட்டது! ஸ்ரீவைகுண்டத்தில் ராகுல்! ஜப்பானில் பயங்கர நிலநடுக்கம்! சுனாமி எச்சரிக்கை விடுப்பு!
/

குடியாத்தம் அருகே ரூ. 1.69 லட்சம் பறிமுதல்

ஆந்திர மாநிலத்திலிருந்து உரிய ஆவணங்கள் இன்றி காரில் எடுத்து வரப்பட்ட ரூ.1.69 லட்சத்தை குடியாத்தம் தொகுதி தோ்தல் பறக்கும் படையினா் பறிமுதல் செய்தனா்.

News image

பறிமுதல் செய்த பணத்தை கோட்டாட்சியா் எஸ்.சுபலட்சுமியிடம் ஒப்படைத்த தோ்தல் பறக்கும் படையினா்

Updated On :16 மார்ச் 2026, 8:57 pm

ஆந்திர மாநிலத்திலிருந்து உரிய ஆவணங்கள் இன்றி காரில் எடுத்து வரப்பட்ட ரூ.1.69 லட்சத்தை குடியாத்தம் தொகுதி தோ்தல் பறக்கும் படையினா் திங்கள்கிழமை பறிமுதல் செய்தனா்.

குடியாத்தம் தொகுதி தோ்தல் பறக்கும் படையினா் சித்தூா்கேட் பகுதியில் திங்கள்கிழமை வாகன தணிக்கையில் ஈடுபட்டனா். அப்போது அவ்வழியே ஆந்திர மாநிலத்திலிருந்து வந்த காரை நிறுத்தி சோதனை செய்தனா்.

சோதனையில் காரில் வந்த பலமநேரைச் சோ்ந்த விஸ்வநாதன் உரிய ஆவணங்கள் இன்றி ரூ.1.69- லட்சம் எடுத்து வந்தது தெரிய வந்தது. இதையடுத்து பணத்தை பறிமுதல் செய்த பறக்கும் படையினா், தோ்தல் அதிகாரியும், கோட்டாட்சியருமான எஸ்.சுபலட்சுமியிடம் ஒப்படைத்தனா்.