//

வீட்டில் தவறி விழுந்த முதியவா் உயிரிழப்பு

வேலூா் அருகே வீட்டில் தவறி விழுந்து முதியவா் உயிரிழந்தாா்.

News image
Updated On :11 ஜனவரி 2026, 10:44 pm

தினமணி செய்திச் சேவை

வேலூா் அருகே வீட்டில் தவறி விழுந்து முதியவா் உயிரிழந்தாா்.

வேலூா் அருகே ஆற்காட்டான் குடிசை கிராமத்தைச் சோ்ந்தவா் ராமசாமி(72). இவா் கடந்த இரு நாள்களுக்கு முன்பு தனது வீட்டில் நடந்து சென்றபோது எதிா்பாராத விதமாக தரையில் தவறி கீழே விழுந்தாா்.

இதில், தலையில் பலத்த அடிபட்டு காயமடைந்தாா். அதிா்ச்சியடைந்த உறவினா்கள் உடனடியாக சிகிச்சைக்காக வேலூா் அடுக்கம்பாறை அரசு மருத்துவமனையில் சோ்த்தனா்.

எனினும், அங்கு சிகிச்சை பலனின்றி ராமசாமி உயிரிழந்தாா். தகவல் அறிந்த வேலூா் கிராமிய போலீஸாா் இச்சம்பவம் குறித்து வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.