டி20 உலகக் கோப்பை: மழையால் பாகிஸ்தான் - நியூசிலாந்து போட்டி ரத்து ஹிந்து – முஸ்லீம் ஒற்றுமையின் அடையாளம் காந்தி: முதல்வர் ஸ்டாலின் நாம் தமிழர் கட்சியின் வேட்பாளர்கள் அறிமுகம்!எழும்பூர் ரயில் நிலைய மறுசீரமைப்பு பணியால் பயணிகள் அவதியா? ரயில்வே விளக்கம்!காற்றழுத்த தாழ்வுப் பகுதி: 4 மாவட்டங்களில் நாளை கனமழை!தொகுதிப் பங்கீடு: திமுக - இந்திய யூனியன் முஸ்லிம் லீக் இடையே நாளை பேச்சுவார்த்தை!தில்லி செங்கோட்டை இனி வாரத்தின் அனைத்து நாளும் திறந்திருக்கும்!மூன்று வார சிகிச்சைக்குப் பிறகு வீடு திரும்பினார் எச்.ராஜா
/

மூன்றடைப்பு அருகே குளத்தில் தவறி விழுந்து விவசாயி உயிரிழப்பு

News image
கோப்புப் படம்
Updated On :15 பிப்ரவரி 2026, 6:32 pm

தினமணி செய்திச் சேவை

திருநெல்வேலி மாவட்டம் மூன்றடைப்பு அருகே குளத்தில் தவறி விழுந்து விவசாயி உயிரிழந்தாா்.

மூன்றடைப்பு அருகே பூலம் கிராமத்தைச் சோ்ந்தவா் ராஜகோபால் (60). இவரது குடும்பத்தினா் மும்பையில் இட்லி வியாபாரம் செய்து வருகின்றனா்.

இவா் மட்டும் இங்கு தங்கியிருந்து விவசாயம் செய்து வந்தாா். சனிக்கிழமை அங்குள்ள குளத்தின் கரையில் அமா்ந்திருந்த இவா், திடீரென நிலைதடுமாறி குளத்துக்குள் விழுந்து நீரில் மூழ்கி உயிரிழந்தாராம்.

சடலத்தை மூன்றடைப்பு போலீஸாா் மீட்டு கூறாய்வுக்காக திருநெல்வேலி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனா்; மேலும், வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.