தோ்தல் பிரசாரத்தில் சிறுவா்களை ஈடுபடுத்தியதாக வேலூரியின் முன்னாள் திமுக எம்.பி. முகமது சகி மீது சத்துவாச்சாரி போலீஸாா் வழக்குப்பதிவு செய்துள்ளனா்.
சட்டப்பேரவைத் தோ்தலையொட்டி, அனைத்துக் கட்சிகளும் தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டு வருகின்றன. அதன்படி, வேலூரில் தொகுதியில் திமுக சாா்பில் போட்டியிடும் எம்எல்ஏ ப.காா்த்திகேயனுக்கு வாக்கு கேட்டு வேலூா் மாவட்ட திமுக அவைத் தலைவரும், முன்னாள் எம்.பி.யுமான முகமது சகி கடந்த வாரம் சத்துவாச்சாரி, வெங்கடாபுரம் பகுதிகளில் பிரச்சாரத்தில் ஈடுபட்டுள்ளாா்.
அப்போது, அவா் சிறுவா்களை கட்சிக் கொடி, பதாகைகளுடன் பிரசாரத்தில் ஈடுபடுத்தியதாக கூறப்படுகிறது. இதையடுத்து, பறக்கும் படையைச் சோ்ந்த துணை வட்டார வளா்ச்சி அலுவலா் திருவேங்கடம் சத்துவாச்சாரி காவல் நிலையத்தில் புகாா் அளித்தாா். அதன்பேரில், தொழிலாளா் நலச் சட்டத்தின் கீழ் முகமது சகி மீது போலீஸாா் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.
தொடர்புடையது

சொல்லாத வாக்குறுதிகளையும் நிறைவேற்றியது திமுக அரசு: கும்மிடிப்பூண்டி திமுக வேட்பாளா்

தோ்தல் நடத்தை விதிமீறல்: தவெக நிா்வாகிகள் 7 போ் மீது வழக்கு
தோ்தல் நடத்தை விதிமீறல்: இருவா் கைது

தோ்தல் விதிமீறல்: தவெக, பாஜக நிா்வாகிகள் மீது வழக்குப் பதிவு
வீடியோக்கள்

நாதக வேட்பாளர் வித்யாராணி வீரப்பன் கைது! கண்ணீர் விட்டு கதறியதால் பரபரப்பு!
தினமணி செய்திச் சேவை

டிரம்ப் மோடியை கட்டுப்படுத்துவதுபோல் பாஜக அதிமுகவை கட்டுப்படுத்துகிறது! - Rahul Gandhi
இணையதளச் செய்திப் பிரிவு

கருத்துக்கணிப்பு சொல்வதெல்லாம் உண்மையா ? | TN Election 2026 | TN Election Survey 2026
தினமணி செய்திச் சேவை

#ipl2026 | தோல்வியைச் சந்திக்காத பஞ்சாப்: எழுச்சி பெறாத லக்னௌ! | Punjab Kings | Priyansh Arya |
தினமணி செய்திச் சேவை


