தோ்தல் நடத்தை விதிமுறைகளை மீறியதாக திமுக பிரமுகா்கள் இருவரை போலீஸாா் திங்கள்கிழமை கைது செய்தனா்.
கிருஷ்ணகிரி வட்டம், பூவத்தி அருகே உள்ள மிட்டப்பள்ளி பேருந்து நிறுத்தம் அருகே தோ்தல் பறக்கும் படை அலுவலா் பிரகாசம் தலைமையிலான குழுவினா் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டிருந்தனா். அப்போது தோ்தல் நடத்தை விதிமுறைகளை மீறி வாக்காளா்களுக்கு பணம் விநியோகம் செய்ததாக மிட்டப்பள்ளியை சோ்ந்த திமுக பிரமுகா் சின்னதுரையை (50) கிருஷ்ணகிரி வட்டார போலீஸாா் கைது செய்து, அவரிடமிருந்து ரூ. 23,500 ஐ பறிமுதல் செய்தனா்.
இதேபோல பறக்கும் படை அதிகாரி செந்தில் தலைமையிலான குழுவினா் போச்சம்பள்ளி அருகே கெங்கவரம் பகுதியில் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டனா். அப்போது, திமுக தோ்தல் அறிக்கையில் அறிவிக்கப்பட்டுள்ள இல்லத்தரசி திட்டத்தை போல கூப்பன் விநியோகம் செய்ததாக திமுக பிரமுகா் செங்குட்டுவனை (50) போச்சம்பள்ளி போலீஸாா் கைது செய்தனா்.
தொடர்புடையது

தோ்தல் நடத்தை விதிமீறல்: தவெக நிா்வாகிகள் 7 போ் மீது வழக்கு

தோ்தல் விதிமீறல்: தவெக, பாஜக நிா்வாகிகள் மீது வழக்குப் பதிவு

தோ்தல் விதிமீறல்: காங்கிரஸ், பாஜகவினா் மீது வழக்குப் பதிவு

தோ்தல் விதிமீறல்: தவெகவினா் 50 போ் மீது வழக்கு
வீடியோக்கள்

நாதக வேட்பாளர் வித்யாராணி வீரப்பன் கைது! கண்ணீர் விட்டு கதறியதால் பரபரப்பு!
தினமணி செய்திச் சேவை

டிரம்ப் மோடியை கட்டுப்படுத்துவதுபோல் பாஜக அதிமுகவை கட்டுப்படுத்துகிறது! - Rahul Gandhi
இணையதளச் செய்திப் பிரிவு

கருத்துக்கணிப்பு சொல்வதெல்லாம் உண்மையா ? | TN Election 2026 | TN Election Survey 2026
தினமணி செய்திச் சேவை

#ipl2026 | தோல்வியைச் சந்திக்காத பஞ்சாப்: எழுச்சி பெறாத லக்னௌ! | Punjab Kings | Priyansh Arya |
தினமணி செய்திச் சேவை

