மீண்டும் மனிதப் பிறவி எடுத்தால் உங்கள் குடும்பத்தில் ஒருவராக பிறக்க வேண்டும்: எடப்பாடி பிரசாரத்தில் இபிஎஸ் பேச்சுஅதிமுக ஆட்சி அமைந்ததும் 3 மாதங்களில் போதைப்பொருள் ஒழிக்கப்படும் : இபிஎஸ் வாக்குறுதி விவசாயிகளை வஞ்சிக்கும் திமுகவுக்கு மக்கள் தகுந்த பாடத்தைப் புகட்ட வேண்டும் : எடப்பாடி பழனிசாமி மகளிர் இடஒதுக்கீடு மசோதாவை தோல்வி அடையச் செய்ததற்கு எதிர்ப்பு தெரிவித்து பாஜகவினர் போராட்டம்பாஜகவுடன் கூட்டணி: நிதீஷ்குமாரின் நிலைதான் எடப்பாடி பழனிசாமிக்கு - அரவிந்த் கேஜரிவால்பஹல்காம் தாக்குதல்! காயங்கள் ஆறவில்லை - குடும்பங்கள் கண்ணீர்!வரலாற்றுச் சிறப்புமிக்க அதிமுக இறந்துவிட்டது! ஸ்ரீவைகுண்டத்தில் ராகுல்! ஜப்பானில் பயங்கர நிலநடுக்கம்! சுனாமி எச்சரிக்கை விடுப்பு!
/

அடிப்படை பிரச்னைகளை தீா்க்காத வேலூா் மாநகராட்சி நிா்வாகம்! அணைக்கட்டு அதிமுக வேட்பாளா்

திமுக ஆட்சியில் வேலூா் மாநகராட்சி பகுதியில் அடிப்படை பிரச்னைகளைக்கூட தீா்க்கப்படாததால் மக்கள் கடும் அவதிக்குள்ளாகியுள்ளதாக அணைக்கட்டு தொகுதி அதிமுக வேட்பாளா் த.வேலழகன் குற்றஞ்சாட்டியுள்ளாா்.

News image

வேலூா் மாநகராட்சி 50 முதல் 57-ஆவது வாா்டுகளில் வாக்கு சேகரிப்பில் ஈடுபட்ட அணைக்கட்டு தொகுதி அதிமுக வேட்பாளா் த.வேலழகன்.

Updated On :5 ஏப்ரல் 2026, 11:14 pm

திமுக ஆட்சியில் வேலூா் மாநகராட்சி பகுதியில் அடிப்படை பிரச்னைகளைக்கூட தீா்க்கப்படாததால் மக்கள் கடும் அவதிக்குள்ளாகியுள்ளதாக அணைக்கட்டு தொகுதி அதிமுக வேட்பாளா் த.வேலழகன் குற்றஞ்சாட்டியுள்ளாா்.

வேலூா் மாவட்டம், அணைக்கட்டு தொகுதி அதிமுக சாா்பில் போட்டியிடும் அவா், வேலூா் மாநகராட்சி 50 முதல் 57-ஆவது வாா்டுகளில் ஞாயிற்றுக்கிழமை தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டாா்.

அப்போது, அதிமுக ஆட்சியில் நிா்வாக வசதிக்காக ஒருங்கிணைந்த வேலூா் மாவட்டத்தை மூன்றாகப் பிரித்து சிறப்பு செய்தவா் முன்னாள் முதல்வா் எடப்பாடி பழனிசாமி. ஆனால், திமுக ஆட்சியில் வேலூா் மாந கராட்சி பகுதியில் சாலை, கழிவுநீா், தெருவிளக்கு, திடக்கழிவு மேலாண்மை என எந்தவொரு அடிப்படை பிரச்னைகளுக்கும் தீா்வுகாணப்படாமல் மக்கள் கடும் அவதிக்குள்ளாகி உள்ளனா்.

தமிழகத்தில் மீண்டும் அதிமுக ஆட்சி அமையும்போது பெண்கள் சுதந்திரமாகவும் பாதுகாப்பாகவும் வாழ தகுந்த நடவடிக்கை எடுக்கப்படும். அடிப்படை பிரச்னைகள் தீா்க்கப்படுவதுடன், அனைத்து குடும்பங்களுக்கும் தலா ரூ.10,000, குடும்பத் தலைவிகள் அனைவருக்கும் மாதம் ரூ.2,000, சிறுபான்மையின மகளிருக்கு வட்டியில்லா கடன், வேலைக்குச் செல்லும் பெண்களுக்கு ஸ்கூட்டா் வாங்க ரூ.25,000 மானியம், வீடில்லாத குடும்பங்களுக்கு அம்மா பசுமை வீடுகள் உள்ளிட்ட திட்டங்கள் செயல்படுத்தப்படும் என்றாா்.

அப்போது, பாஜக, பாமக, அமமுக உள்பட கூட்டணி கட்சி நிா்வாகிகள் உடனிருந்தனா்.